‘ஸ்டார் 3.0’ திட்டத்தில் புதிய சர்வே எண்கள் விடுபட்டதால் சிக்கல்: புதிய வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய முடியாமல் அவதி

‘ஸ்டார் 3.0’ திட்டத்தில் புதிய சர்வே எண்கள் விடுபட்டதால் சிக்கல்: புதிய வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய முடியாமல் அவதி
Updated on: 
1 min read

சேலம்: பத்​திரப்​ப​திவுத் துறை​யில் ‘ஸ்​டார் 3.0’ திட்​டத்​தின் கீழ் இணை​ய​வழி பத்​திரப் ​ப​திவு நடைமுறைக்கு வந்​துள்ள நிலை​யில், தமிழகத்​தின் பல்​வேறு பகுதி​களில் புதிய வீட்​டுமனைகளுக்​கான சர்வே எண்​கள் இணை​ய தளத்​தில் விடு​பட்​டுள்​ள​தால், பத்​திரப்​பதிவு செய்ய முடி​யாமல் பொது​மக்​கள் அவதிப்​பட்டு வரு​கின்​றனர்.

தமிழகத்​தில் பத்​திரப்​ப​திவுத் துறையை நவீனப்​படுத்​தும் வகை​யில், ‘ஸ்​டார் 2.0’ திட்​டம் 2018-ம் ஆண்டு பிப்​ரவரி​யில் நடைமுறைப்​படுத்​தப்​பட்​டது. தொடர்ந்து, ‘ஸ்​டார் 3.0’ திட்​ட​மாக நவீனப்​படுத்​தப்​பட்டு, கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி முழு​மையாக பயன்​பாட்​டுக்கு வந்​தது.

இதன்​மூலம், புதிய அடுக்​குமாடிக் குடி​யிருப்​பு​கள், அங்​கீகரிக்​கப்​பட்ட மனைப்​பி​ரிவு​களின் முதல்​முறை விற்​பனைப் பத்​திரங்​கள், வங்​கிக் கடன் பெறு​வதற்​கான ஆவணங்​கள் உள்​ளிட்​ட​வற்​றைச் சார்-பதிவாளர் அலு​வல​கத்​துக்கு நேரில் செல்​லாமல் இணை​ய​வழி​யில் மட்​டுமே பதிவு செய்​யும் நேரடி வருகை​யில்லா ஆவணப்​ப​திவு முறை அமல்​படுத்​தப்​பட்​டது.

இந்​நிலை​யில், ‘ஸ்​டார் 3.0’ திட்​டம் நடைமுறைக்கு வந்த ஆகஸ்ட் 17-ம் தேதிக்​குப் பிறகு, தமிழகத்​தின் பல்​வேறு பகுதி​களில் புதிய வீட்​டுமனைகளுக்​கான சர்வே எண்​கள் பதிவுத்​துறை​யின் tnreginet இணை​யதளத்​தில் இடம்​பெறவில்லை எனப் புகார் எழுந்​துள்​ளது. இத​னால், வீட்​டுமனைகளை வாங்​கிய​வர்​கள் அவற்​றைப் பத்​திரப்​ப​திவு செய்ய முடி​யாத நிலை ஏற்​பட்​டுள்​ளது.

இதற்கு உதா​ரண​மாக, சேலம் மாவட்​டம், தலை​வாசல் வட்​டம், மணி​விழுந்​தான் தெற்கு கிராமத்​தில் மட்​டும் 450-க்​கும் மேற்​பட்ட சர்வே எண்​கள் விடு​பட்​டுள்​ளன. இத​னால், அப்​பகுதி​யில் வீட்​டுமனைகளை விற்​பனை செய்​பவர்​களும், வாங்​கிய​வர்​களும் கடந்த 2 மாதங்​களாக அவற்​றைப் பதிவு செய்ய முடி​யாமல் தவித்து வரு​கின்​றனர்.

இது​குறித்து வீட்​டுமனை விற்​பனை​யில் ஈடு​பட்​டுள்​ளோர் மற்​றும் மனைகளை வாங்​கியோர் கூறிய​தாவது: பதிவுத்​துறை​யின் tnreginet இணை​யதளத்​தில் புதிய வீட்​டுமனைகளுக்​கான சர்வே எண்​கள் விடு​பட்​டுள்​ள​தால், கடந்த 2 மாதங்​களாக வீட்​டுமனை விற்​பனை பெரிதும் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. வீட்​டுமனைகளை வாங்​கு​வதற்​காக வங்​கிக் கடன் பெற விண்​ணப்​பிக்க முடி​யாத நிலை​யும் ஏற்​பட்​டுள்​ளது. பல மாவட்​டங்​களி​லும் வீட்​டுமனை விற்​பனை பாதிக்​கப்​பட்​டுள்​ள​தால், பத்​திரப்​ப​திவுத் துறைக்​கும் அதன் மூலம் கிடைக்க வேண்​டிய வரு​வாயும் பாதிக்​கப்​பட்​டுள்​ளது, என்​றனர்.

இது​குறித்து பத்​திரப்​ப​திவுத் துறை உயரதி​காரி​களிடம் கேட்​டபோது, ‘ஸ்​டார் 3.0 திட்​டத்​தில் மென்​பொருள் நிறு​வனம், வரு​வாய்த் துறை ஆவணங்​களை மேப்​பிங் செய்​த​போது சில சர்வே எண்​கள் விடு​பட்​ட​தால் இந்​தப் பிரச்​சினை ஏற்​பட்​டுள்​ளது. தமிழகத்​தின் பல்​வேறு பகுதி​களி​லும் இதுபோன்ற பிரச்​சினை எழுந்​துள்​ளது. இது​குறித்து சம்​பந்​தப்​பட்ட மென்​பொருள் நிறு​வனத்​தின் கவனத்​துக்​குக் கொண்டு செல்​லப்​பட்​டுள்​ளது. விரைவில் இப்​பிரச்​சினைக்​குத் தீர்வு காணப்​படும்’ என்​றனர்.

‘ஸ்டார் 3.0’ திட்டத்தில் புதிய சர்வே எண்கள் விடுபட்டதால் சிக்கல்: புதிய வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய முடியாமல் அவதி
தீபாவளி: தமிழகத்தில் காலை, மாலை தலா 1 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

X