அதிமுக ஒன்றிணைந்தால் தான் வெற்றிபெற முடியும் என்பது மக்களின் கருத்து: ஓபிஎஸ்

தேனியில் இருந்து சென்னை செல்ல திண்டுக்கல் ரயில்நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் | படம்: நா.தங்கரத்தினம்.

தேனியில் இருந்து சென்னை செல்ல திண்டுக்கல் ரயில்நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் | படம்: நா.தங்கரத்தினம்.

Updated on
1 min read

திண்டுக்கல்: அதிமுக ஒன்றிணைந்தால் தான் வருகின்ற தேர்தலில் வெற்றிபெறமுடியும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தேனியில் இருந்து சென்னை செல்ல திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தவெக கூட்டம் உள் அரங்கில் நடந்தியது குறித்து அந்த கட்சி தலைவரிடம் தான் கேட்கவேண்டும். அதிமுக ஒன்றிணைந்தால் தான் வெற்றிபெறமுடியும் என்பது தமிழக மக்களுடைய கருத்தாக உள்ளது” என்றார்.

தவெக கூட்டத்தில் பேசிய விஜய் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் குறித்த கேள்விக்கு, அவரது கனவு நனவாகட்டும் என்றார்.

மேலும், “எஸ்ஐஆர் படிவம் பூர்த்தி செய்து கொடுப்பதில் பிரச்சனை இல்லை. இதில் விடுபட்டாலும் மேலும் ஒருவாய்ப்பாக புதிய வாக்காளர்களை சேர்க்க வாய்ப்புள்ளது. படிவங்கள் பூர்த்தி செய்வதில் சில கடினங்கள் உள்ளன. அதை எளிதாக்கவேண்டும். எஸ்ஐஆர் படிவம் பூர்த்தி செய்து கொடுக்க கால அவகாசத்தை நீட்டிக்கவேண்டும்” என்றார்.

பிஹாரில் எஸ்ஐஆர் தான் வெற்றிக்கு காரணம் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியது குறித்து கேட்டதற்கு, “சீனிவாசன் அண்ணன் உண்மைதான் பேசுவார், உண்மையை தவிர எதுவும் பேசமாட்டார். பத்திரிகையாளர்கள் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்குவது தவிர்க்கப்படவேண்டும். பத்திரிகையாளர்களுக்கு உரிய மரியாதை தரப்படவேண்டும்” என்றார்.

மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்வது குறித்து கேட்டதற்கு, “அரசியலில் எதுவும் நடக்கலாம். எங்கள் கொள்கையின்படி வாய்ப்பு தரவேண்டும். அண்ணாமலை, தினகரன் சந்திப்புக்கு வாழ்த்துக்கள். அனைவரும் ஒன்றிணைய வாய்ப்பு அதிகம். எனது ஆதரவாளர்கள் விலகுவது என்னை எந்தவிதத்திலும் பாதிக்காது. நாம் பிறக்கும்போது எந்த பதவியோடு பிறந்தோம் இழப்பதற்கு” என்றார்.

<div class="paragraphs"><p>தேனியில் இருந்து சென்னை செல்ல திண்டுக்கல் ரயில்நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் | படம்: நா.தங்கரத்தினம்.</p></div>
‘இந்த தற்குறிகள் ஒன்றாக சேர்ந்துதான் உங்கள் அரசியலை கேள்விக்குறியாக்க போகிறார்கள்’ - விஜய் பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in