“யார் துரோகி... யார் எதிரி என்று மக்களுக்குத் தெரியும்” - விடுகதை போடும் சசிகலா

சசிகலா | கோப்புப்படம்

சசிகலா | கோப்புப்படம்

Updated on
1 min read

அண்ணா நினைவு நாளை​யொட்டி மெரி​னா​வில் உள்ள அண்ணா நினை​விடத்​தில் மரி​யாதை செய்த வி.கே.சசிகலா, “யார் துரோகி... யார் எதிரி என்​பதை மக்​களின் கருத்​துக்கே விட்​டு​விடு​கிறேன். மக்​களுக்கு அது நன்​றாகவே தெரி​யும்” என்று தெரி​வித்​தார்.

இதுதொடர்​பாக அண்ணா நினை​விடத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: மத்​திய அரசு தாக்​கல் செய்த பட்​ஜெட்​டில் தமி​ழ​கத்​துக்கு என பெரி​தாக எது​வும் இடம்​பெற​வில்​லை. பணி​புரி​யும் பெண்​களுக்​கான தங்​கும் விடு​தி​கள் ஏற்​கெனவே 2013-ம் ஆண்​டு, மறைந்த முதல்​வர் ஜெயலலி​தா​வின் ஆட்​சி​யில் கொண்​டு​வரப்​பட்​டது தான். இதை தற்​போது நாடு முழு​வதும் செய்​யப்​போவ​தாக மத்​திய அரசு அறி​வித்​திருப்​பது வரவேற்​கத்​தக்​கது. அதேசம​யம் மாத ஊதி​யம் பெறு​வோருக்​கான வரு​மான வரி விகி​தாச்​சா​ரத்​தில் எந்​த​வித மாற்​ற​மும் இல்லை என்​பது பெரிய ஏமாற்​றம்.

இன்​றைக்கு நான் ஏற்ற உறு​தி​மொழி​யில், “எனது தலை​மை​யில் துரோகி​களுக்​கும், எதிரி​களுக்​கும் நாங்​கள் பாடம் கற்​பிப்​போம். என் தலை​மை​யில் தேர்​தலை சந்​திக்க இருக்​கி​றோம்” என்ற வாசகங்​கள் இடம்​பெற்​றிருப்​பது உண்மை தான். இதில் யார் துரோகி... யார் எதிரி என்​பதை மக்​களின் கருத்​துக்கே விட்​டு​விடு​கிறேன். மக்​களுக்கு அது நன்​றாகவே தெரி​யும். இதை விவரித்​துச் சொல்ல வேண்​டிய அவசி​யம் இல்​லை. அதே​போல் தேர்​தல் களத்​தில் எங்​களு​டைய எம்​ஜிஆர் - ஜெயலலிதா தொண்​டர்​கள் இருப்​பார்​கள். அது எப்​படி, என்ன என்​பதை விரை​வில் அனை​வ​ரும் தெரிந்​து​கொள்​வார்​கள்.

தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் அமமுக இணைந்​திருக்​கிறது. ஒவ்​வொரு கட்​சி​யும் அவர்​களுக்கு எது சரி எனப் படு​கிறதோ, அந்​தந்த கட்​சி​யோடு கூட்​டணி அமைக்​கி​றார்​கள். அதில் நான் தலை​யிட்டு எது​வும் சொல்ல முடி​யாது. என்​னைப் பொறுத்​தவரை எம்​ஜிஆர் - ஜெயலலிதா வழி​யில் ஆட்சி நடக்க வேண்​டும்.

அதே​போல் தவெக தலை​வர் விஜய்​யும் அதி​முக-வை ஊழல் கட்சி என்று விமர்​சித்​திருக்​கி​றார். ஒவ்​வொருத்​தருக்​கும் ஒரு எண்​ணம் இருக்​கும். ஜெயலலிதா இருந்​த​போது அரசாங்​கம் எப்​படி இருந்​தது என்​பதை நான் சொல்​ல​வேண்​டிய அவசி​யம் இல்​லை.

தமி​ழ​கத்​தில் சட்​டம் - ஒழுங்கு மிக​வும் மோச​மாக இருக்​கிறது. இதற்கு திமுக பதில் சொல்லி ஆகவேண்​டும். தமி​ழ​கத்​தில் எம்​ஜிஆர் - ஜெயலலிதா வழி​யில் மக்​களாட்​சியை கொண்டு வரு​வதற்​கு, எனது 39 ஆண்டு அனுபவத்தை வைத்து என்​னால் என்ன செய்​ய​முடி​யுமோ அதைச் செய்​வேன். இவ்​வாறு அவர் கூறி​னார்.

<div class="paragraphs"><p>சசிகலா | கோப்புப்படம்</p></div>
பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை திடீர் விலகல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in