“திமுக வெற்றிபெற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு” - தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யா

திமுக வேட்பாளர் சுகன்யா

திமுக வேட்பாளர் சுகன்யா

Updated on: 
1 min read

தாராபுரம்: “திமுக நிச்சயமாக வெற்றிபெற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. திராவிட மாடல் ஆட்சி மீண்டும் வந்திடாதா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் வந்துவிட்டது. அதனால் எங்களுக்கு வெற்றி நிச்சயம்” என தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சுகன்யா தெரிவித்தார்.

மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய தொகு​தி​களில் இடைத்​தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடை​பெறவுள்​ளது. தொடர்ந்து வாக்​கு​கள் வரும் 9-ம் தேதி எண்​ணப்​பட்டு முடிவு​கள் அறிவிக்​கப்பட உள்​ளன.

தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்யபாமா போட்டியிடுகிறார். திமுக சார்பில் சுகன்யாவும், அதிமுக சார்பில் பானுமதியும், நாதக சார்பில் கார்த்திகாவும், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் லட்சுமணனும் தாராபுரத்தில் போட்டியிடுகின்றனர்.

இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடக்கும் நிலையில், திமுக வேட்பாளர் சுகன்யா தனது வாக்கினை பதிவு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாக்குச்சாவடி வாரியாக ஆய்வு செய்துள்ளோம். திமுக நிச்சயமாக வெற்றிபெற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த மூன்று மாத கால ஆட்சியில் ஏமாற்றத்தை சந்தித்தால், மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

திமுக தலைவர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திமுக நிர்வாகிகள் எனக்காக தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டனர். கடந்த 3 மாதங்களாக தவெக ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை. 2021ல் எங்கள் ஆட்சியின் 100 நாள் சாதனைகளையும், இப்போதைய ஆட்சியின் 100 நாள் சாதனைகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள், அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை.

திராவிட மாடல் ஆட்சி மீண்டும் வந்திடாதா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் வந்துவிட்டது. அதனால் எங்களுக்கு வெற்றி நிச்சயம். தவெக வேட்பாளர்களை எல்லா பக்கமும் புறக்கணிக்கிறார்கள். ” என்றார்.

<div class="paragraphs"><p>திமுக வேட்பாளர் சுகன்யா</p></div>
“தாராபுரத்தில் இரட்டை இலை வெற்றி 100% உறுதி” - அதிமுக வேட்பாளர் பானுமதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in