தொழில் அனுமதிக்கு 21 நாள் கெடு மீறப்பட்டால் அபராதம்: தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அறிவுறுத்தல்

தொழில் அனுமதிக்கு 21 நாள் கெடு மீறப்பட்டால் அபராதம்: தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அறிவுறுத்தல்
Updated on: 
2 min read

சென்னை: ‘தமிழகத்தில் 21 நாள் கெடுவுக்குள் தொழில் அனுமதிகளை வழங்க வேண்டும், மீறினால் அபராதம் விதிக்கப்படும்’ என்று தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அறிவுறுத்தி உள் ளது.

தமிழகத்தை 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் நவ.3-ம் தேதிஅமைக்கப்பட்டது. இதில் தலைமைச் செயலர் தலைவராகவும், தொழிற்துறை செயலர் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள். இவர்களுடன் மொத்தம் 18 அலுவல்சார் உறுப்பினர்கள் இடம்பெறுவர். முதலீடுகளை ஈர்ப்பதுடன், அறிவிக்கப்படும் முதலீடுகள் நடைமுறை திட்டங்களாக மாறுவதைக் கண்காணிக்கும் வகையில் பணிகள் மேற் கொள்ளப்படும்.

இந்நிலையில் இந்த ஆணையத்தின் முதல் கூட்டம் தலைமைச்செயலர் மு.சாய்குமார் தலைமையில் தலைமைச் செயலகத் தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ரூ.200 கோடிக்குமேலான முதலீடுகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் சார்ந்த முதலீடுகள், வெளிநாடுவாழ் தமிழர் முதலீடுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள் ளப்பட்டது.

காலக்கெடு காலம்காலக்கெடு காலமான 21 நாட்கள் முடிந்தபின் அனுமதி தரப் பட்டவை குறித்து அறிவிக்கை செய்யவும், விதிமீறலுக்கு பொறுப்பானவர்கள் மீது அபராதம் விதிக்கவும், நிலுவை விண்ணப்பங்களை விரைந்து தீர்க்கவும் முடிவுஎடுக்கப்பட்டது.

கடந்த மே மாதம் முதல் ரூ.1.14 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள், 1.42 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதில் 83 ஒப்பந்தங்கள் நிலம் பெறப்பட்ட நிலைகளை எட்டியுள்ளன. ஒப்பந்தச் செயலாக்கம் 74.11 சதவீதமாக உள்ளது. மேலும், வெற்றித் தமிழகம் அறிக்கையில் தொழில் துறைக்கான 37 அறிவிப்புகளில் 18 (48 சதவீதம்) பணிகள் ஏற்கெனவே தொடங்கியுள்ளன.

புதிய தொழிற்கொள்கை 2027 தயாரிப்பு பணிகளை விரைவுபடுத்தவும், தற்போதைய கொள்கைகளின் செல்லுபடிக் காலம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. நகராட்சி நிர்வாகத் துறையில் வணிக உரிமக் காலம் 3-ல் இருந்து 10 ஆண்டுகளாகவும், பள்ளிக்கல்வித் துறையில் தனியார் பள்ளி அங்கீகாரக் காலம் 3-ல் இருந்து 20 ஆண்டுகளாகவும் உயர்த்தப்பட்டுள் ளன. குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறையில் தொழில்மனை 30 நாட்களுக்குள் ஒதுக்கப்படும்.

தொகுப்பு சலுகைத் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ரூ.1,700 கோடி வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 6 மாதங்களில் மட்டும் ரூ.2,000 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த புதிய திட்டங்களுக்கும் மானியம் வழங்கஆணையம் அறிவுறுத்தியது டன், கூடுதலாக ரூ.1,600 கோடி நிதியும் கோரப்பட்டுள்ளது.

சரக்கு ஏற்றுமதியை உயர்த்த... தமிழகத்தின் சரக்கு ஏற்றுமதியை 59-ல் இருந்து 72 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழிற் சாலைகள் தங்களுக்கான உயரழுத்த, மிகை உயரழுத்த மின் இணைப்புகளை சுயமாக அமைத்துக் கொள்ளவும், பெரிய திட்டங்களுக்கான மின் உப

கரணங்களை மேம்பாட்டாளர் களே கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்கப்படும். தேவையான உள்கட்டமைப்பு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு, அடுத்த 10 ஆண்டுகளுக்கும் மேலான மின்சாரம், தண்ணீர் தேவைகளை மதிப்பிட சிப் காட்டுக்கு அறிவுறுத்தப்பட்டது.

சிப்காட், டிட்கோ, எல்காட் நிறுவனங்களின் பயன்பாட்டில் இல்லாத நிலங்களையும், பயன்படுத்தப்படாத தொழில் மனைகளை யும் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கவும், மாவட்ட அளவில் ஏற்றுமதி கருத்தரங்குகள் நடத்தவும், சுற்றுலா திட்டங்களை தொழில் திட்டங்களாகக் கருதி ஒற்றைச்சாளர முறையில் விரைந்து செயல்படுத்தவும் உத்தரவிடப்பட்டதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

தொழில் அனுமதிக்கு 21 நாள் கெடு மீறப்பட்டால் அபராதம்: தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அறிவுறுத்தல்
பாகிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா | U-19 Asia Cup

X