தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் பாஜக ஆட்சி திட்டம் முறியடிப்பு: ஸ்டாலினுக்கு பழ.நெடுமாறன் பாராட்டு

தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் பாஜக ஆட்சி திட்டம் முறியடிப்பு: ஸ்டாலினுக்கு பழ.நெடுமாறன் பாராட்டு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் பாஜக ஆட்சி அமைக்க வகுக்​கப்​பட்ட சதி திட்​டம் முறியடிக்​கப்​பட்​டுள்​ளது என்​று, தமிழர் தேசிய முன்​னணி​யின் நிறு​வனர் பழ.நெடு​மாறன், தலை​வர் செ.ப.​முத்​தமிழ்​மணி ஆகியோர் தெரி​வித்​துள்​ளனர்.

இதுதொடர்​பாக, அவர்​கள் கூட்​டாக நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் யாருக்​கும் பெரும்​பான்மை கிடைக்​காத நிலை உரு​வாகி, அதிக இடங்​களில் வெற்​றி​பெற்ற தவெக தலை​வர் விஜய் முதல்​வர் பொறுப்பை ஏற்​றுள்​ளார்.

அவருக்​கும், அவரது கட்​சியை சார்ந்த அமைச்​சர்​கள் மற்​றும் சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களுக்​கும் வாழ்த்​தினை​யும், பாராட்​டு​தலை​யும் தெரி​வித்து கொள்​கிறோம்.

முதல்​வர் விஜய் ஆட்சி அமைப்​ப​தற்கு உதவும் வகை​யில், திமுக கூட்​ட​ணி​யில் அங்​கம் வகித்த சில கட்​சிகள் அவருக்கு ஆதரவு தரு​வதற்கு ஒப்​புதல் கொடுத்த, திமுக தலை​வர் ஸ்டா​லினை பாராட்​டு​கிறோம்.

இவ்​வாறு செய்​த​தின் மூலம் தமிழகத்​தில் யாருக்​கும் பெரும்​பான்மை இல்லை என்று கூறி, ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் பாஜக ஆட்சி அமைக்க வகுக்​கப்​பட்ட சதி திட்​டத்தை ஸ்டா​லின் முறியடித்​திருக்​கிறார்.

தமிழகத்​தில் ஜனநாயகம் தழைப்​ப​தற்கு உதவிய அவருடைய பெருந்​தன்​மையை அனை​வரும் பாராட்​டு​வார்​கள் என்​ப​தில் ஐயமில்​லை.

கடந்த திமுக ஆட்​சி​யில் செயல்​படுத்​தப்பட்ட நல்ல திட்​டங்​களை தொடர்ந்து செயல்​படுத்​து​மாறும், தனது தேர்​தல் கால வாக்​குறு​தி​களை நிறைவேற்​று​மாறும் புதிய முதல்​வர் விஜய்யை கேட்டு கொள்​கிறோம். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்.

தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் பாஜக ஆட்சி திட்டம் முறியடிப்பு: ஸ்டாலினுக்கு பழ.நெடுமாறன் பாராட்டு
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடங்கள் எத்தனை? - பள்ளிக்கல்வித் துறை கணக்கெடுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in