வி.பி.சிங் நினைவு நாள்: கட்சித் தலைவர்கள் புகழாரம்

வி.பி.சிங் நினைவு நாள்: கட்சித் தலைவர்கள் புகழாரம்
Updated on: 
1 min read

சென்னை: மறைந்த முன்​னாள் பிரதமர் வி.பி.சிங் நினைவு நாளுக்கு பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் புகழாரம் சூட்​டி​யுள்​ளனர்.

திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின்: சமூகநீ​தியை நிலை​நாட்​டு​ வதையே தன் இலக்​காகக் கொண்டு ஆட்​சியை செலுத்​தி, இந்​தியா முழு​வதும் கடந்த 30 ஆண்​டு​களில் பிற்​படுத்​தப்​பட்ட மக்​கள் கல்​வி​யிலும் வேலை​வாய்ப்​பிலும் மேலெழுந்து வர காரண​மாக இருந்த இடஒதுக்​கீட்டை துணிச்​சலாக அளித்​தவர்

முன்​னாள் பிரதமர் வி.பி.சிங்.

இன்​றைய ஆட்​சி​யாளர்​களைப் பார்க்​கும்​போது, வி.பி.சிங்கை ‘கோட்’ என கொண்​டாடதோன்​றுகிறது. பதவி, பொறுப்​பு​களை​விட செய்​ய​வந்த பணிக்காக வாழ்ந்த சமூகநீ​திக் காவலர் வி.பி.சிங் புகழ் வாழ்க.

எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநி​தி: மண்​டல் கமிஷன் பரிந்​துரைகளை நிறைவேற்ற தன் ஆட்​சி​யையே விலையாகத் தந்த உறு​திக்குச் சொந்​தக்​காரர். தமிழகம் கொண்டாடும் வி.பி.சிங்​கைப் போற்​று​வோம்.

பாமக தலை​வர் அன்​புமணி: மத்​திய அரசு வேலை​வாய்ப்​பு​களில் பிற பிற்​படுத்​தப்​பட்ட மக்​களுக்கு 40 ஆண்​டு​களுக்​கும் மேலாக மறுக்​கப்​பட்டு வந்த இடஒதுக்​கீட்டை வழங்​கிய​வர். அனைத்து சமூகங்களுக்​கும் அவர்​களின் மக்​கள்​தொகை அடிப்​படை​யில் இடஒதுக்​கீடு என்ற லட்​சி​யத்தை வென்​றெடுக்க உறு​தி​யேற்​போம்.

வி.பி.சிங் நினைவு நாள்: கட்சித் தலைவர்கள் புகழாரம்
திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை தொகுதிக்கான தடை நீட்டிப்பு: அம்பாசமுத்திரம், பெருந்துறையில் இடைத்தேர்தல் நடத்த அனுமதி

X