ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் 2,000 பேர் சென்னையில் 4-வது நாளாக போராட்டம்

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

சென்னை: தமிழக அரசின் உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தில் இணைக்க வலி​யுறுத்தி சென்​னை​யில் 2,000-க்​கும் மேற்​பட்ட ஊராட்சி செய​லாளர்​கள் 4-வது நாளாக நேற்றும் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

தமிழக அரசின் உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தில் தங்​களை​யும் இணைக்க வலி​யுறுத்தி தமிழ்​நாடு ஊராட்சி செய​லா​ளர்​கள் சங்​கம் சார்​பில் சென்​னை​யில் சிவானந்தா சாலை, மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கப் பகுதி உள்​ளிட்ட இடங்களில் கடந்த 3 நாட்​களாக காத்​திருப்பு போராட்​டம் நடத்​தப்​பட்டு வந்​தது. இதன்தொடர்ச்சியாக 4-வது நாளான நேற்று சங்​கத்​தின் மாநிலத் தலை​வர் அ.ஜான்​போஸ்கோ பிர​காஷ் தலை​மை​யில் சைதாப்​பேட்டை பனகல் மாளிகை அருகே போராட்​டம் நடை​பெற்​றது.

இதுகுறித்து செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: ஊரக வளர்ச்சி மற்​றும் ஊராட்​சித் துறை​யில் ஊராட்சி செய​லா​ளர்​களாக 25 ஆண்​டு​களுக்கும் மேலாக பணிபுரிகிறோம். ஆனால், கடந்த 2018-ம் ஆண்​டில்​தான் எங்​களுக்கு கால​முறை ஊதி​யம் அறிவிக்​கப்​பட்​டது. எனினும், ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தில் அரசு இது​வரை எங்​களை இணைக்​க​வில்​லை. இதனால், வெறும் ரூ.2 ஆயிரம் மட்​டுமே ஓய்​வூ​தி​யமாக கிடைக்​கும் நிலை உள்​ளது.

எனவே, தமிழ்​நாடு உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தில் எங்​களையும் இணைக்க வலி​யுறுத்தி போராட்​டத்தை முன்னெடுத்​துள்​ளோம். இது​வரை 2 கட்​ட​மாக அரசுடன் பேச்​சு​வார்த்தை நடத்​தி​யும் உடன்​பாடு ஏற்​ப​டாத​தால் போராட்​டம் தொடர்​கிறது. இதனால் தமிழகம் முழு​வதும் 8,500 ஊராட்சி செய​லா​ளர்கள் பணிக்குச் செல்​லாமல் உள்​ளனர்.

பொங்​கல் பண்டிகை நெருங்​கும் நிலை​யில் போராட்​டம் தொடர்ந்​தால் ஊராட்சிப் பணி​கள் பாதிக்​கப்​படும். எனவே, எங்களது வாழ்​வா​தா​ரக் கோரிக்கையை ஏற்​று, உறு​தியளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்​துக்​கான அரசாணை​யில் ஊராட்​சி​யையும் இணைக்க வேண்டும். மேலும் மாத ஓய்​வூ​தி​ய​மாக குறைந்​த​பட்​சம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

போராட்​டத்​தில் சுமார் 2 ஆயிரத்​துக்​கும் மேற்பட்​டோர் பங்கேற்​றனர். போலீ​ஸார் அறி​வுறுத்​தி​யும் கலைந்து செல்​லாத​தால், அனை​வரும் கைது செய்​யப்​பட்​டு, அரு​கில் உள்​ள மண்​டபங்​களில்​ தங்க வைக்​கப்​பட்​டனர்​.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் டெல்லியில் 18-ம் தேதி ராகுல் ஆலோசனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in