தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: பழனிசாமி கடும் கண்டனம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: பழனிசாமி கடும் கண்டனம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் சட்​டம் ஒழுங்கு முற்​றி​லும் சீர்​குலைந்​து​விட்​டது என அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனிசாமி கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: சென்னை தண்​டை​யார்​பேட்​டை​யில் கஞ்சா விற்​பனையை தட்​டிக் கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு என்​பவர் அடித்​துக் கொலை செய்​யப்​பட்​டிருப்​ப​தாக வரும் செய்தி அதிர்ச்​சி​யளிக்​கிறது.

​போதைப் பொருள் புழக்​கத்தை தட்​டிக் கேட்​டால் கொலை தான் இந்த ஆட்​சி​யில் பதிலா? இதுதான் மாற்​ற​மா? இந்த லட்​சணத்​தில், திருச்​சி​யில் பேசிய முதல்​வர், தன் மீது வீண் பழி போடு​வ​தாக வேறு ஆதங்​கப்படு​கிறார்.

காவல்​துறையை கையில் வைத்​திருப்​பவர், சட்​டம் ஒழுங்​கிற்கு பொறுப்​பேற்​காமல் நழுவ முயல்​வது வெட்​கக்​கேடு. இதில், போதைப்​பொருளை தன்​னால் ஒழிக்க முடி​யாது என்று மறை​முக​மாக ஒப்​புதல் வாக்​குமூலம் வேறு அளித்​துள்​ளார்.

மேலும், சிங்​கப்​பெண் அதிரடிப் படையை அடுத்த வாரம் தொடங்கி வைப்​பா​ராம். கடந்த வாரம் அனைத்து ஏற்​பாடு​களும் தயா​ராக இருந்த நிலை​யில், எதற்கு நீங்​கள் கடைசி நிமிடத்​தில் ரத்து செய்​தீர்​கள்? உங்​கள் உதவி​யாளர் வீட்டு விழாவை சிறப்​பிக்க தமிழகப் பெண்​களின் பாது​காப்பை சமரசம் செய்​தீர்​களா? “ஆட்சி நடத்​து​வது எப்​படி” என நீங்​கள் 6 மாத க்ராஷ் கோர்ஸ் முடிப்​ப​தற்​குள் மக்​கள் மடிந்​து கொண்டே இருக்க வேண்​டு​மா? அதை யாரும் கேள்வி கேட்​கக் கூடா​தா? தூத்​துக்​குடி அருகே கூட்​டுப் பாலியல் வன்​கொடுமை வழக்​கில் ஆளுங்​கட்சி தவெக நிர்​வாகி​கள் இரு​வர் கைது செய்​யப்​பட்​டு உள்​ள​தாக செய்​திகள் வரு​கின்​றன.

ஒரு கட்​சித் தலை​வ​ராக, தன் கட்​சி​யினரை அடக்கி வைக்க வக்​கில்​லாதவர், எப்​படி காவல்​துறையை நிர்​வகிப்​பார்? பஞ்ச் டயலாக் பேசும் ரீல்ஹீரோ​வாகவே தன்னை பாவித்​துக்கொள்​ளும் பொய்க்​கால் குதிரை அரசின் முதல்​வர், அந்த மாய உலகில் இருந்து வெளியேவந்​து, தான் வகிக்​கும் பொறுப்​பின் தலை​யாயப் பணி​யான சட்​டம் ஒழுங்​கை காக்​க நடவடிக்​கைகள் மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

மனம் தளர வேண்டாம்

பழனிசாமி வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், கட்சியின் தற்போதைய நிலையை எண்ணி, தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர், மகேந்திரன் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டது வேதனையாக இருக்கிறது. அதிமுகவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள சோதனையைக் கண்டு நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் மனம் தளர வேண்டாம்; விபரீதமான செயல்களில் ஈடுபட வேண்டாம்.

வெற்றி, தோல்வி என்பது மாறி, மாறிவரும். தோல்வியைக் கண்டு நாம் துவண்டு விடுவதில்லை. கட்சி தற்போது வெற்றி வாய்ப்பை இழந்தாலும், இதிலிருந்து விரைவிலேயே மீண்டு, எதிர்வரும் தேர்தலில் மகத்தான வெற்றியை பெறும்.

தற்போதைய சூழ்நிலையில் இருந்து கட்சி மீண்டெழுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன். இதற்கு நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: பழனிசாமி கடும் கண்டனம்
பருவகால பேரிடர்களை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in