பழநி நில மோசடி வழக்கு: சார் பதிவாளர், இடைத்தரகர் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

ஜஸ்டின் மணிகண்டன் | ஜெயப்பிரகாஷ்

ஜஸ்டின் மணிகண்டன் | ஜெயப்பிரகாஷ்

Updated on
1 min read

பழநி: பழநி கோயில் மடத்திற்கு சொந்தமான நிலத்தை மோசடியாக பத்திரப் பதிவு செய்த வழக்கில் கைது செய்யட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், இடைத்தரகர் ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் இன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம் பழநி மடம் நில மோசடி வழக்கில் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், இடைத்தரகர் ஜெயப்பிரகாஷ், நிலத்தை வாங்கிய சேதுபதி, வெள்ளைத் துரை, மடம் நிர்வாகி முருகதாஸ் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து விசாரித்தனர். இதில் முருகதாஸ், சேதுபதி, வெள்ளைத்துரை ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், இடைத்தரகர் ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை இன்று (புதன் கிழமை) திண்டுக்கல் ஜே.எம். 1 நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் இருவரது மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

<div class="paragraphs"><p>ஜஸ்டின் மணிகண்டன் | ஜெயப்பிரகாஷ்</p></div>
“யானைகளின் தவிர்க்கக்கூடிய உயிரிழப்புகளை தடுப்பது முக்கியம்” - வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் அறிவுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in