“‎ஜெம் வீரமணி கைதுக்கு நீதிமன்றம்தான் காரணம்” - பெ.சண்முகம்

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்

Updated on: 
1 min read

சிவகங்கை: “ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் திமுக, அதிமுக, தவெக அரசுகள் தாமாக முன்வந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவு காரணமாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறினார்.

‎சிவகங்கை மாவட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. மாநில செயலாளர் பெ.சண்முகம் திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “‎‎நாடு முழுவதும் 13 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் மத்திய பாஜக அரசின் கைப்பாவையாகச் செயல்படுவதை மற்ற தேர்தல் ஆணையர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.

வாக்காளர்களை நீக்குவதன் மூலம் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியை தடுக்கவும், நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்க்க வலியுறுத்தியும் அக்டோபர் 1-ம் தேதி தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.‎‎

மின்வாரியத்தில் மின் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு அரசாணை வெளியிட்டது கண்டனத்துக்குரியது. அதேபோல், அனைத்து துறைகளிலும் நிரந்தர பணியிடங்களில் ‎ஒப்பந்தப் பணியாளர்களை நியமிக்கின்றனர். இதை தவிர்த்து நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

‎‎ஜெம் வீரமணி வழக்கில் திமுக, அதிமுக, தவெக அரசுகள் தாமாக முன்வந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவு காரணமாகவே இந்த வழக்கு விரைவுபடுத்தப்பட்டு வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையை சென்னை மாநகர காவல் ஆணையர் மேற்பார்வையிடுவதற்குப் பதிலாக, உயர் நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் நடைபெற வேண்டும்.

‎இடைத்தேர்தல்களில் தனித்துப் போட்டியிடுவதால், தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. அதிமுகவில் வெற்றி பெற்று 20 நாட்களில் ராஜினாமா செய்த நபர்களை மீண்டும் வேட்பாளராக நிறுத்தியிருப்பது வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல். இதனால் எந்தவொரு கூட்டணியிலும் இணையாமல் உழைக்கும் மக்களின் ஆதரவை நம்பி தனித்துப் போட்டியிடுகிறோம்” என்று அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்</p></div>
பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in