மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய சண்முகம்

மதுராந்தகத்தில் பிரச்சாரம் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம்.

மதுராந்தகத்தில் பிரச்சாரம் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம்.

Updated on: 
1 min read

மதுராந்தகம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சுகந்திக்கு ஆதரவாக அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது: ஏழை, எளிய மக்களின் குரலாக சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுகந்தியின் குரல் ஒலிக்க வேண்டும் என்றால் எங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள்.

மதுராந்தகம் நகரில் உள்ள குடிநீர் பிரச்னையை தீர்க்கவும் மற்றும் பிரம்மாண்டமாக அமைந்துள்ள ஏரியை சீரமைத்து சுற்றுலா பகுதியாக மாற்றுவதற்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பளியுங்கள். மேலும், தங்களின் சுய நலனுக்காக இடைத்தேர்தலை உருவாக்கிய நபர்களுக்கு தேர்தல் மூலம் உரிய பதில் அளிக்கும் வகையில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இதை தொடர்ந்து அரசு மருத்துவமனை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுகந்தி பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

<div class="paragraphs"><p>மதுராந்தகத்தில் பிரச்சாரம் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம்.</p></div>
விஜய் வரும் வழியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாதக வேட்பாளர், கட்சியினர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in