திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதை தடுத்து நிறுத்தியது இடதுசாரிகள்: சண்முகம் தகவல்

தாராபுரத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்துப் பேசிய மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்.

தாராபுரத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்துப் பேசிய மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்.

Updated on: 
1 min read

தாராபுரம்: தமிழகத்​தில் நடை​பெற்ற கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக​ ஆதரவுடன் அதி​முக ஆட்சி அமைப்​ப​தைத் தடுத்து நிறுத்​தி​யது இடது​சா​ரி​க்கட்சிகள்​தான் என்று மார்க்​சிஸ்ட் கட்சியின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் தெரிவித்துள்ளார்.

தாராபுரம் இடைத்​தேர்​தலில் போட்​டி​யிடும் இந்​திய கம்​யூனிஸ்ட் வேட்​பாளர் லட்​சுமணனை ஆதரித்து நேற்று நடந்த பொதுக்​கூட்​டத்​தில் அவர் மேலும் பேசி​ய​தாவது: தவெக தரப்​பில் இருந்து எந்​த​வித​மான எதிர்பார்ப்​பு​களும், உறு​தி​மொழி​யும் அளிக்​கப்​ப​டா​மல்​தான் மது​ராந்​தகம், தாராபுரம் தொகு​தி​யில் 2 வேட்பாளர்​களும் ராஜி​னாமா செய்​தார்​களா, இதற்கு முதல்​வர் விஜய்யோ அல்​லது மற்ற அமைச்​சர்​களோ பதில் சொல்​ல​வில்​லை.

மீண்​டும், மீண்​டும் அவர்​கள் சொல்​வது திமுக ஆதர​வுடன் அதி​முக ஆட்சி அமைக்க முயற்​சித்​தது என்றுதான். சொல்​லப்​போ​னால் திமுக ஆதர​வுடன் அதி​முக ஆட்சி அமைப்​ப​தைத் தடுத்து நிறுத்​தி​யது இடது​சா​ரிக் கட்சி​கள்​தான்.

ஆட்சி அமைக்க பெரும்​பான்​மை​யில்​லாத​போது வராமல் பெரும்​பான்மை நிரூபிக்​கப்​பட்ட பின்​னரே இருவரும் தவெக வந்​தனர். அதி​முக-​பாஜக கூட்​ட​ணியை தொடர்ந்து எதிர்க்கிறோம். அவர்கள் உள்பட ஏனைய வேட்பாளர்களையும் தோற்​கடிக்​க வேண்​டும்​. இவ்​​வாறு பேசி​னார்​.

<div class="paragraphs"><p>தாராபுரத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்துப் பேசிய மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம். </p></div>
தமிழகம் முழுவதும் 13 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: அஸ்ரா கார்க்குக்கு கூடுதல் பொறுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in