

ஓ.எஸ்.மணியன்
நாகப்பட்டினம்: இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் மேற்கு ஒன்றிய அதிமுக ஆலோசனைக் கூட்டத் தில் அவர் பேசியதாவது: அதிமுகவில் இருந்து சிலர் வெளியேறி மாற்றுக் கட்சியில் இணைவது சுயநலம் சார்ந்தது. தங்களது சொத்துகளை பாதுகாத்துக் கொள்ள ஆளுங்கட்சியில் சேர்கின்றனர்.
யார் வெளியேறினாலும் அதிமுகவின் வளர்ச்சியை தடுக்க முடியாது. தவெக அரசு நீடிக்காது. இனி தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். புதியவர்களுக்கு வாய்ப்பளித்து, நான் தேர்தலில் போட்டியிட்டபோது செய்ததைவிட கூடுதலாக பணியாற்றி வெற்றி பெற வைப்பேன். இவ்வாறு கூறினார்.