ஆலோசனை கூட்டத்தை தள்ளிவைத்த ஓபிஎஸ்

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் | கோப்புப் படம்
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் | கோப்புப் படம்
Updated on
1 min read

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிசம்பர் 15-ம் தேதி மீண்டும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துவிட்டு வந்தார். கடந்த டிச.10-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சி ஒருங்கிணைப்பு தொடர்பாக பழனிசாமி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என பன்னீர்செல்வம் தரப்பினர் எதிர்பார்த்திருந்த நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது.

இதற்கிடையில் நாளை (டிச.15) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அப்போது ஒருங்கிணைப்பில் ஏதேனும் தீர்வு கிடைக்கும் என பன்னீர்செல்வம் நம்புகிறார்.

இந்நிலையில், நாளை நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டத்தை பன்னீர்செல்வம், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார். வரும் டிச.24-ம் தேதி எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. அன்று தனது அரசியல் நிலைப்பாட்டை அவர் அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் | கோப்புப் படம்
ஆதிதிராவிட மாணவர்களின் விடுதி காப்பாளர் தற்கொலைக்கு காரணமானவர் மீது நடவடிக்கை: இபிஎஸ் வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in