கூட்ட நெரிசல், விரைவு தரிசன மோசடியை தடுக்க கோயில்களில் விரைவில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு

அறநிலையத் துறை திட்டம்
கூட்ட நெரிசல், விரைவு தரிசன மோசடியை தடுக்க கோயில்களில் விரைவில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு
Updated on
1 min read

சென்னை: கூட்ட நெரிசல், விரைவு தரிசன மோசடியைத் தடுக்க கோயில்​களில் ஆன்​லைன் டிக்​கெட் முன்பதிவு முறையை விரை​வில் அறி​முகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்​தில் திருச்​செந்​தூர், திரு​வண்​ணா​மலை, சமயபுரம், பழநி உள்​ளிட்ட முக்​கிய கோயில்​களுக்கு வரும் பக்​தர்​களின் எண்​ணிக்கை கணிச​மாக அதி​கரித்து வரு​கிறது.

இதனால், நீண்ட நேரம் வரிசை​யில் காத்​திருக்க வேண்​டி​யுள்​ளது. இந்த வாய்ப்​பைப் பயன்​படுத்​தி, விரை​வாக சுவாமி தரிசனம் செய்ய ஏற்​பாடு செய்​வ​தாகக் கூறி பக்​தர்​களிடம் சிலர் பணம் பறித்து மோசடி​யில் ஈடு​படு​வ​தாக அறநிலை​யத் துறைக்கு தொடர்ந்து புகார்​கள் வந்த வண்​ணம் உள்​ளன.

இந்​நிலை​யில் இடைத்​தரகர்​களின் நடமாட்​டத்​தைத் தடுக்​க​வும், கூட்ட நெரிசலை முறைப்​படுத்​த​வும் முக்​கியக் கோயில்​களில் ஆன்​லைன் டிக்​கெட் முன்​ப​திவு மற்​றும் நேர ஒதுக்​கீட்டு முறையை விரை​வில் அறி​முகம் செய்ய அறநிலை​யத் துறை திட்​ட​மிட்​டுள்​ளது.

இது தொடர்​பாக, சில நாட்​களுக்கு முன்பு அறநிலை​யத் துறை அமைச்​சர் ரமேஷ் தலை​மை​யில் ஆலோ​சனைக் கூட்​ட​மும் நடை​பெற்​றது. அப்​போது இதுகுறித்து அதி​காரி​களிடம் அமைச்​சர் விவா​தித்​தார்.

இந்​நிலை​யில் தற்​போது, பக்​தர்​கள் நீண்ட வரிசை​யில் பல மணிநேரம் காத்​திருப்​ப​தைத் தவிர்க்​கும் பொருட்​டு, இந்​தத் திட்​டத்தை உடனடி​யாக அமல்​படுத்த அதி​காரி​களுக்கு அமைச்​சர் உத்​தர​விட்​டுள்​ளார்.

இந்த திட்​டத்​தின் மூலம், பக்​தர்​கள் தங்​களின் செல்​போன் அல்​லது கணினி வாயி​லாக, தாங்​கள் வர விரும்​பும் தேதி மற்​றும் உகந்த நேரத்தை முன்​கூட்​டியே தேர்வு செய்து கொள்​ளலாம்.

இனிவரும் காலங்​களில், ஆன்​லைன் மூலம் பெறப்​பட்ட இந்த இ-டிக்​கெட் வைத்​திருப்​பவர்​கள் மட்​டுமே கோயிலுக்​குள் தரிசனத்​துக்கு அனு​ம​திக்​கப்​படு​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. பண்​டிகை நாட்​கள், வார இறுதி நாட்​கள் மற்​றும் முக்​கி​யத் திரு​விழாக் காலங்​களுக்​கும் இந்த ஆன்​லைன்​ முன்​ப​திவு முறை கட்​டாய​மாக்​கப்​பட உள்​ளது.

கூட்ட நெரிசல், விரைவு தரிசன மோசடியை தடுக்க கோயில்களில் விரைவில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு
தொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள் நேரடியாக பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெற முடியாது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in