கூட்டுறவு நிறுவனங்களில் ஆன்லைன் கொள்முதல் அறிமுகம்: சுயஉதவிக் குழு தயாரிப்புகளுக்கு முன்னுரிமை

கூட்டுறவு நிறுவனங்களில் ஆன்லைன் கொள்முதல் அறிமுகம்: சுயஉதவிக் குழு தயாரிப்புகளுக்கு முன்னுரிமை
Updated on
1 min read

சென்னை: கூட்​டுறவு நிறு​வனங்​களில் அறி​முகம் செய்யப்​பட்​டுள்ள ஆன்​லைன் கொள்​முதல் முறை​யில், சுயஉதவிக் குழுக்​களின் தயாரிப்​பு​களுக்கு முன்​னுரிமை அளிக்க வேண்​டும் என அமைச்​சர் காந்​தி​ராஜ் உத்​தர​விட்​டார்.

இதுகுறித்து கூட்​டுறவுத் துறை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் நுகர்​வோர் கூட்​டுறவு நிறு​வனங்​களில் பொருட்​கள் கொள்​முதல் செய்​வ​தில் வெளிப்​படைத்​தன்​மையை உறு​தி​செய்​யும் வகை​யில், ஏற்​கெனவே நடை​முறை​யில் இருந்த கூட்டு கொள்​முதல் குழு முறை ரத்து செய்​யப்​பட்​டு, ஆன்​லைன் கொள்​முதல் முறை அறி​முகம் செய்யப்​பட்​டுள்​ளது.

இதன் செயல்​பாடு குறித்து கூட்​டுறவுத் துறை அமைச்​சர் வ.காந்​தி​ராஜ், தலை​மைச் செயல​கத்​தில் நேற்று ஆய்வு செய்​தார். அப்​போது, புதிய முறை​யில் கூட்​டுறவுச் சங்​கங்​கள், மகளிர் சுயஉதவிக் குழுக்​கள், விவ​சாய உற்​பத்​தி​யாளர் அமைப்​பு​கள், உற்​பத்​தி​யாளர்​கள் மற்​றும் அங்​கீகரிக்​கப்​பட்ட வழங்​குநர்​கள் அதிக அளவில் பங்​கேற்​கும்வகை​யில் விளம்​பரங்​கள் மேற்​கொள்ள வேண்​டும் என அதிகாரி​களுக்கு அறி​வுறுத்​தி​னார்.

மாநிலம் முழு​வதும் உள்ள உற்​பத்​தி​யாளர்​கள், அங்​கீகரிக்​கப்​பட்ட வழங்​குநர்​களை அடை​யாளம் கண்​டு, அவர்​களுக்கு பயிற்சி வழங்​கி, அதிக நபர்​களை ஆன்​லைன் கொள்​முதல் முறை​யில் இணைக்க வேண்​டும் என்​றும் உத்​தர​விட்​டார். பொருட்​கள் கொள்​முதல் செய்​யப்​படும்​போதும், அவை கூட்​டுறவு விற்​பனை நிலை​யங்​களுக்கு வந்து சேரும்​போதும் கடுமை​யான தரப் பரிசோதனை மேற்​கொள்ள வேண்​டும்.

இதன்​மூலம் பொது​மக்​களுக்கு தரமான பொருட்​கள் மட்​டுமே விற்​பனை செய்​யப்​படு​வதை உறு​தி​செய்ய வேண்​டும். கூட்​டுறவுச் சங்​கங்​கள், மகளிர் சுயஉதவிக் குழுக்​கள் மற்​றும் விவ​சாய உற்​பத்​தி​யாளர் அமைப்​பு​கள் தயாரிக்​கும் பொருட்​களுக்கு அதிக சந்தை வாய்ப்​பும், தொடர்ச்​சி​யான கொள்​முதல் வாய்ப்​பும் கிடைக்​கும் வகை​யில் புதிய ஆன்​லைன் முறையைச் செயல்​படுத்த வேண்​டும் எனவும் அமைச்​சர் அறி​வுறுத்​தி​னார்.

கூட்டுறவு நிறுவனங்களில் ஆன்லைன் கொள்முதல் அறிமுகம்: சுயஉதவிக் குழு தயாரிப்புகளுக்கு முன்னுரிமை
எரிபொருள் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் கடும் கட்டுப்பாடுகள் அமல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in