உள்ளாட்சி தேர்தலில் இணைய​வழியில் வேட்புமனு தாக்கல் - ​சட்டப்பேரவை கூட்ட தொடரில் அரசு சட்டத் திருத்தம் கொண்டு வருமா?

போக்​கு​வரத்து நெரிசல் குறை​யும், வெளிப்​படைத் தன்மை அதி​கரிக்​கும்
உள்ளாட்சி தேர்தலில் இணைய​வழியில் வேட்புமனு தாக்கல் - ​சட்டப்பேரவை கூட்ட தொடரில் அரசு சட்டத் திருத்தம் கொண்டு வருமா?
Updated on
2 min read

சென்னை: தமிழகத்​தில் தற்​போது 38 மாவட்​டங்​களில் உள்ள ஊரக உள்​ளாட்​சிகளில் 37 மாவட்ட பஞ்​சா​யத்​துகள், 397 ஊராட்சி ஒன்​றி​யங்​கள், 12,570 ஊராட்​சிகள் உள்​ளன. இவற்​றில் 1,06,453 வார்​டு​கள் உள்​ளன. ஊரக உள்​ளாட்​சி​யில் மொத்​தம் வார்டு கவுன்​சிலர் மற்​றும் ஊராட்சி மன்​றத் தலை​வர் என 1,18,978 பதவி​களுக்கு நேரடி தேர்​தலும், ஊராட்சி மன்ற துணைத் தலை​வர், ஒன்​றியக்​குழு தலை​வர், துணைத் தலை​வர், மாவட்ட ஊராட்சி தலை​வர், துணைத் தலை​வர் என 5,973 பதவி​களுக்கு மறை​முக தேர்​தலும் நடை​பெறும்.

நகர்ப்​புற உள்​ளாட்​சிகளில் 25 மாநக​ராட்​சிகள், 146 நகராட்​சிகள், 478 பேரூ​ராட்​சிகள் உள்​ளன. இவற்​றில் 12,838 வார்​டு​கள் உள்​ளன. இதில் 12,838 கவுன்​சிலர் பதவி​களுக்கு நேரடி தேர்​தலும், மாநக​ராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி மற்​றும் பேரூ​ராட்சி தலை​வர் மற்​றும் துணைத் தலை​வர் பதவி​கள் என 13,373 பதவி​களுக்கு மறை​முக தேர்​தலும் நடை​பெறும்.

மேற்​கூறிய உள்​ளாட்சி அமைப்​பு​களில் 28 மாவட்​டங்​களில் உள்ள ஊரக உள்​ளாட்​சிகளின் பதவி காலம் கடந்த 2025-ம் ஆண்டு ஜன.5-ம் தேதி​யுடன் நிறைவடைந்​தது. காஞ்​சிபுரம், வேலூர் உள்​ளிட்ட 9 மாவட்​டங்​களில் உள்ள ஊரக உள்​ளாட்​சிகளின் பதவி காலம் வரும் அக்​.19-ம் தேதி​யுட​னும், அனைத்து மாவட்​டங்​களி​லும் உள்ள நகர்ப்​புற உள்​ளாட்​சிகளில் அடுத்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி​யுட​னும் நிறைவடைய உள்​ளது.

புதி​தாக பொறுப்​பேற்​றுள்ள தவெக அரசு, அடுத்த ஆண்டு பிப்​ர​வரி​யில் அனைத்து உள்​ளாட்​சிகளுக்​கும் தேர்​தல் நடத்த திட்​ட​மிட்​டுள்​ளது. அதற்​கான பணி​களை மாநில தேர்​தல் ஆணை​யம் மேற்​கொண்டு வரு​கிறது. இதில் மொத்​தம் 1,31,816 பதவி​களுக்கு நேரடி தேர்​தல் நடை​பெறும்.

இதற்​காக சுமார் 5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் வேட்​புமனுக்​களை தாக்​கல் செய்ய வாய்ப்​புள்​ளது. வேட்​பாளர்​கள் ஊர்​வல​மாக வரும் பழக்​கம் கொண்​டிருப்​ப​தால், வேட்​புமனு தாக்​கலின்​போது, தேர்​தல் நடத்​தும் அலு​வலர் அலு​வல​கம் இடம்​பெற்​றுள்ள சாலைகளில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்டு பொது​மக்​கள் கடும் சிரமத்​துக்​குள்​ளாகின்​றனர்.

அரசி​யல் கட்​சிகள், கட்சி சாரா வேட்​பாளர்​கள் அனை​வரும் தங்​கள் வலிமை​யை, எதிர்த்​தரப்​புக்கு தெரிவிக்​கும் களமாக வேட்​புமனு தாக்​கலை கருதுகின்​றன. அங்கு கூட்​டம் சேர்ப்​ப​தற்​கும், வெற்றி வாய்ப்​புக்​கும் துளி​யும் தொடர்​பில்லை என்​பதை தவெக தலை​வர் விஜய், கடந்த சட்​டப்​பேரவை தேர்​தலில் நிரூபித்​துள்​ளார்.

மக்​களவை, சட்​டப்​பேரவை தேர்​தலை விட உள்​ளாட்சி தேர்​தலில் தான் கடும் போட்​டி​யும், தேர்​தல் மோதல்​களும் அதி​க​மாக நடக்​கும். போட்​டி​யிடு​வோரும் அதி​மாக இருப்​பார்​கள். வேட்​புமனு தாக்​கல் ஊர்​வலங்​களும் அதி​க​மாக இருக்​கும். போக்​கு​வரத்து நெரிசலும் அதிக​மாகும். அதனால், வரும் உள்​ளாட்சிதேர்​தலில் இணைய வழி​யில்மட்​டுமே வேட்​புமனுக்​களை தாக்​கல் செய்​யும் நடை​முறையை கொண்​டுவர வேண்​டும்.

அதற்​கான சட்​டத் திருத்​தத்தை வரும் சட்​டப்​பேரவை பட்​ஜெட் கூட்​டத் தொடரில் தவெக அரசு மேற்​கொள்ள வேண்​டும் என்று பொது​மக்​களிடம் எதிர்​பார்ப்பு எழுந்​துள்​ளது. இன்​றைய சூழலில் கிராம​வாசிகள் கூட பல ஆண்​டு​களாக தங்​களுக்​கான சமூகநல திட்ட பயன்​களை பெற​வும், தங்​கள் குழந்​தைகளுக்கு சாதிச்​சான்றை பெற​வும், இ-சேவை மையம் மூல​மாக இணை​ய​வழி​யில் மட்​டுமே விண்​ணப்​பித்து வரு​கின்​றனர்.

எனவே, வேட்பு மனு தாக்​கலை​யும் இணை​யம் மூல​மாக தாக்​கல் செய்​யும் நடை​முறையை கொண்டு வரலாம். இதில் ஆள்​மாறாட்​டத்தை தவிர்க்க ஆதார் ஓடிபி மூல​மாக கூட வேட்​புமனு தாக்​கலை முடிக்​கும்​படி செய்​ய​லாம். வெளிப்​படைத்​ தன்​மை​யும்​ அதி​கரிக்​கும்​ என்​பது சமூக ஆர்​வலர்​களின்​ கருத்​தாக உள்​ளது.

உள்ளாட்சி தேர்தலில் இணைய​வழியில் வேட்புமனு தாக்கல் - ​சட்டப்பேரவை கூட்ட தொடரில் அரசு சட்டத் திருத்தம் கொண்டு வருமா?
மதுரை, கோவை ‘மெட்ரோ’ மீண்டும் நிராகரிப்பு: போதிய மக்கள்தொகை இல்லை என்று மத்திய அரசு காரணம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in