தாமிரபரணியில் எடுக்கும் தண்ணீருக்கு லிட்டருக்கு ஒரு பைசா கட்டணம்: உயர் நீதிமன்றத்தில் பொதுப்பணித் துறை தகவல்

தாமிரபரணியில் எடுக்கும் தண்ணீருக்கு லிட்டருக்கு ஒரு பைசா கட்டணம்: உயர் நீதிமன்றத்தில் பொதுப்பணித் துறை தகவல்
Updated on
1 min read

மதுரை: தூத்​துக்​குடி மாவட்​டம் முத்​தாலங்​குறிச்​சி​யைச் சேர்ந்த காம​ராஜ், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தாமிரபரணி ஆற்​றங்​கரையோரம் அமைந்​துள்ள பல்​வேறு நிறு​வனங்​கள் அரசுக்கு ரூ.250 கோடி நீர் வரி பாக்கி வைத்​துள்​ளன.

தனி​யார் சிமென்ட் ஆலை மற்​றும் பல்​வேறு நிறு​வனங்​கள் தண்​ணீர் வரி பாக்​கியை செலுத்​தாமல் தொடர்ந்து தாமிரபரணி ஆற்​றி​லிருந்து நீரை எடுத்து பயன்​படுத்தி வரு​கின்​றன.

இதனால் அரசுக்கு வரு​வாய் இழப்பு ஏற்​படு​வதுடன், அளவுக்கு அதி​க​மாக நீர் உறிஞ்​சப்​படு​வ​தால் சுற்​றுச்​சூழல் பாதிப்​பும் ஏற்​பட்டு வரு​கிறது.

எனவே, தாமிரபரணி ஆற்​றி​லிருந்து நீர் எடுக்​கும் நிறு​வனங்​களிட​மிருந்து வரி பாக்​கியை வசூலிக்​க​வும், அந்த நிதியை ஆற்​றின் பாது​காப்பு மற்​றும் புனரமைப்​புக்கு பயன்​படுத்​த​வும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனுவை நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், பி.பு​கழேந்தி அமர்வு விசா​ரித்​தது. பொதுப்​பணித் துறை சார்​பில், தாமிரபரணியி​லிருந்து தண்​ணீர் எடுக்​கும் தனி​யார் நிறு​வனங்​களிட​மிருந்து லிட்​டருக்கு ஒரு பைசா வீதம் தண்​ணீர் கட்​ட​ணம் வசூலிக்​கப்​படு​கிறது எனக் கூறப்​பட்​டது. அதற்கு நீதிப​தி​கள், “தனி​யார் நிறு​வனங்​கள் ஒரு லிட்​டர் தண்​ணீரை ரூ.20-க்கு விற்​கின்​றன.

அவர்​களுக்கு வழங்​கப்​படும் தண்​ணீருக்கு ஒரு லிட்​டருக்கு ஒரு பைசா​தான் இன்​ன​மும் வசூலிக்​கப்​படு​கிற​தா?” என்று கேள்வி எழுப்​பினர். பின்​னர் நீதிப​தி​கள், “தாமிரபரணி ஆற்​றில் எத்​தனை நிறு​வனங்​கள் தண்​ணீர் எடுக்​கின்​றன, ஒரு நாளைக்கு எடுக்​கும் தண்​ணீரின் அளவு என்ன, இது​வரை எவ்​வளவு தண்​ணீர் எடுக்​கப்​பட்​டுள்​ளது, தண்​ணீருக்​கான மொத்த கட்​ட​ணம் எவ்​வளவு, அதில் எவ்​வளவு கட்​ட​ணம் வசூலிக்​கப்​பட்​டுள்​ளது? 20 ஆண்​டு​களுக்கு முன்பு நிர்​ண​யம் செய்த தண்​ணீர் கட்​ட​ணத்தை இன்​னும் ஏன் உயர்த்​த​வில்லை என்​பது தொடர்​பாக நெல்லை ஆட்​சி​யர், மாநக​ராட்சி ஆணை​யர் மற்​றும் பொதுப்​பணித்​துறை அதி​காரி​கள் பதில் அளிக்க வேண்​டும்” என்று உத்​தர​விட்​டனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in