

சென்னை: ராயபுரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஷீலாமேரி. இவர், குறைந்த விலையில் தங்கக் காசு வழங்கும் முதலீட்டு திட்டத்தை தனது தூரத்து உறவினர் பிரபு மணி மூலமாக நடத்தி வந்துள்ளார்.
கடந்த 2023-24-ம் ஆண்டு வரை 200-க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்த நிலையில், 2024 இறுதியில் பிரபு மணி திடீரென தனது நிறுவனத்தை மூடிவிட்டார்.
தங்க காசு வியாபாரம் செய்யும் நபர் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறிய அவர், சொத்துகளை விற்று, பணத்தை தருவதாக முதலீட்டார்களிடம் கூறி வந்துள்ளார்.
ஆனால், ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பணத்தை திருப்பித் தரவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் சென்னை அசோக் நகர் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தனர்.
இந்த வழக்கில் பிரபு மணி நேற்று கைது செய்யப்பட்டார். ``ரூ.20 கோடி மோசடி நடந்துள்ளது. பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரியிடமும் விசாரணை நடத்தியுள்ளோம்'' என்று போலீஸார் தெரிவித்தனர்.