மதுரையில் இருந்து சென்னை செல்ல ஆம்னி பேருந்துகளில் ரூ.3,000 கட்டணம் - பயணிகள் அவதி

மதுரையில் இருந்து சென்னை செல்ல ஆம்னி பேருந்துகளில் ரூ.3,000 கட்டணம் - பயணிகள் அவதி
Updated on
1 min read

மதுரையிலிருந்து சென்னைக்கு செல்ல ஆம்னி பேருந்துகளில் ரூ.3,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.

பொங்கல் பண்டிகையை கொண்டாட பல்வேறு நகரங்களி லிருந்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு குடும்பத்துடன் வந்தவர்கள் விடுமுறை முடிந்த நிலையில் நேற்று ஊர்களுக்கு திரும்பினர். இதனால் மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கும், தென் மாவட்டங்களுக்கும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 250- க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. பேருந்து நிலையங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டு, சிறப்பு பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு டிக்கெட் வழங் கப்பட்டது. அதிகாரிகள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதை கண்காணித்தனர்.

இதேபோல் மதுரையில் இருந்தும், மதுரை வழியாக இயக்கப்பட்ட அனைத்து ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. மதுரை ரயில் நிலையத்திலும் பயணிகள் அதிகம் இருந்தனர். முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிகளை வரிசையில் நிறுத்தி போலீஸார் ஏற்றிவிட்டனர்.

ஆம்னி பேருந்து: ஆம்னி பேருந்துகளில் சென்னைக்கு வழக்கமான நாட்களில் ரூ.700 முதல் ரூ.1,000 வரையும், பண்டிகை நாட்களில் ரூ.2,000 வரையும் வசூலிக்கப்படுவது வழக்கம். நேற்று வழக்கத்தை விட கூடுதலாக ரூ.3 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. சில பேருந்துகளில் ரூ.6 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பயணிகள் தெரிவித் தனர். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர்.

வேன்களில் பயணம்: கோவைக்குச் செல்லும் பேருந்துகள் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது. மதுரையிலிருந்து கோவைக்கு அரசு பேருந்தில் ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், கூட்டம் அதிகமாக இருப்பதை பயன்படுத்தி தனியார் வேன்கள் ரூ.500 கட்டணம் வசூலித்து பயணிகளை ஏற்றிச் சென்றனர். விதிமுறைப்படி வேன்களில் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது. இருப்பினும் ஆரப்பாளையத்திலிருந்து தனியார் வேன்களில் இரவு முழுவதும் பயணிகள் ஏற்றிச் செல்லப்பட்டனர்.

மதுரையில் இருந்து சென்னை செல்ல ஆம்னி பேருந்துகளில் ரூ.3,000 கட்டணம் - பயணிகள் அவதி
பாஜக தேசியத் தலைவர் தேர்தல்: நிதின் நபின் இன்று வேட்புமனு தாக்கல்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in