ரூ.2.79 கோடி வரி பாக்கி: ஜிஎஸ்டி கடிதத்தால் மூதாட்டி அதிர்ச்சி

ரூ.2.79 கோடி வரி பாக்கி: ஜிஎஸ்டி கடிதத்தால் மூதாட்டி அதிர்ச்சி
Updated on
1 min read

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டையைச் சேர்ந்த மூதாட்டிக்கு ரூ.2.79 கோடி வரிபாக்கி என ஜிஎஸ்டி அலு வலகத்தில் இருந்து கடிதம் வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. ஜோலார்பேட்டை அடுத்த புதூர் படவேட்டம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முரு கேசன். இவரது மனைவி ருக்கு மணி(68). இவர், 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், கோடியூர் பகுதியில் உள்ள வங்கிக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வந்த பணத்தை எடுக்க சென்றுள்ளார். அப்போது வங்கி பணியாளர்கள் ஜிஎஸ்டி வரிபாக்கிக்காக மூதாட்டியின் வங்கிகணக்கு முடக்கம் செய் யப்பட்டதாக தெரிவித்தனர்.

இதுதெரியாத மூதாட்டி வங்கி மேல்அதிகாரிகளிடம் சென்று கேட்டபோது, ‘‘ஆம்பூர் பகுதியில் உள்ள பழங்குடி யினர் உதவி ஆணையர் மூலம் நீங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக ஜிஎஸ்டி அலு வலகத்தில் இருந்து கடிதம் வந்துள்ளது.

அதில், ஆர்.எம். டிரேடர்ஸ் வைத்துக்கொண்டு அதன் மூலம் 2 கோடியே 79 லட்சத்து 19 ஆயிற்று 420 ரூபாய் பணம் கட்ட வேண்டும் என வங்கிக்கு நோட்டீஸ் அனுப் பப்பட்டுள்ளது.

இதன் காரணமாக உங் களது வங்கி கணக்கு முடக் கப்பட்டுள்ளது. மேலும், விவரம் தேவைப்பட்டால் ஜிஎஸ்டி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ருக்மணி செய்வதறி யாமல் வங்கியில் இருந்து வெளியேறினார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது ‘‘கடந்த பல ஆண்டுகளாக 100 வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். ஜிஎஸ்டி என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது, நான், நிறுவனம் தொடங்கி அதன் மூலம் அரசுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வங்கி ஊழியர்கள் கூறுகின்றனர். அரசு அதிகாரிகள் எனக்கு நியா யம் கிடைக்க உதவி செய்ய வேண்டும்’’ என்றார்.

ரூ.2.79 கோடி வரி பாக்கி: ஜிஎஸ்டி கடிதத்தால் மூதாட்டி அதிர்ச்சி
சென்னையில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழக வளாகம் - முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in