“சட்டப்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்” - ஜெம் வீரமணி வழக்கில் கனிமொழி கருத்து

திமுக எம்.பி கனிமொழி

திமுக எம்.பி கனிமொழி

Updated on
1 min read

சென்னை: “இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், சட்டப்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்” என்று ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கு குறித்து திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்​தில் பெரும் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யுள்ள ‘ஜெம் கிரானைட்​ஸ்’ நிறு​வனத்​தின் நிறு​வனர் ஆர்​.வீரமணி (84) மீதான போக்சோ வழக்கு விவ​காரத்​தில், திடுக்​கிடும் பின்​னணி தகவல்​கள் ஒவ்​வொன்​றாக வெளிவந்து கொண்​டிருக்​கின்​றன. பண பலமும், அதி​கார பலமும் குற்​ற​வாளி​களை எப்​படி காப்​பாற்ற முயன்றன என்​ப​தை​யும், தற்​போது இந்த வழக்​கில் காவல்​துறை​யின் உயர​தி​காரி​கள் மற்​றும் இடைத்​தரகர்​கள் தொடர்பு குறித்​தும் அதிர்ச்​சித் தகவல்​கள் ஒவ்​வொன்​றாக வெளிவந்து கொண்​டிருக்​கின்​றன. இது அரசியல் ரீதியாக அதிர்வலைகளை எழுப்பி உள்ளது.

இந்நிலையில், இது குறித்து சமூக வலைதள பதிவு மூலம் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.

“சமூகத்தில் மதிப்பிற்குரியவர்களாகக் கருதப்படுபவர்கள், குழந்தைகள் மீது இவ்வளவு கொடூரமான செயல்களில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 1990-களில் இருந்தே இக்குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து இத்தகைய கொடுஞ்செயல்களில் அவர்களால் ஈடுபட முடிந்திருப்பதும், அதற்கான சூழல் சமூகத்தில் உருவாகியிருப்பதும் மிகுந்த கவலையளிக்கிறது.

இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், சட்டப்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

இது தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு மட்டும் கிடைக்க வேண்டிய நீதியல்ல. இனி எந்தக் குழந்தையும் இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாகாத வகையில், பாதுகாப்பான சமூகச் சூழலை உறுதி செய்ய வேண்டும்.

தவறு செய்தவர்கள் மட்டுமல்ல, தவறுக்கு உடந்தையாக இருந்தவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்” என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.அமைச்சர் நிர்மல் குமார்

<div class="paragraphs"><p>திமுக எம்.பி கனிமொழி</p></div>
“ஜெம் வீரமணி விவகாரத்தில் திமுக அளவுக்கு மீறி எதிர்வினை...” - அமைச்சர் நிர்மல் குமார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in