மாற்று அரசியலுக்கு வாக்களிக்க வேண்டும்: தாராபுரம் நாதக வேட்பாளர் கார்த்திகா வலியுறுத்தல்

தாராபுரம் அருகே மூலனூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாதக வேட்பாளர் கார்த்திகா.

தாராபுரம் அருகே மூலனூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாதக வேட்பாளர் கார்த்திகா.

Updated on: 
1 min read

தாராபுரம்: ​தா​ராபுரம் சட்​டப்​பேரவை தொகுதி இடைத்​தேர்​தல் களம் சூடு​பிடித்​துள்ள நிலை​யில், நாம் தமிழர் கட்சி வேட்​பாளர் கார்த்​திகா, தாராபுரம் மற்​றும் அதன் சுற்​றி உள்ள கிராமப் பகுதி​களில் வீதி வீதி​யாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்​டார்.

இந்தப் பிரச்​சா​ரத்​தின்போது, தாராபுரம் நகரமற்​றும் கிராமப்​புறப் பகு​திகளில் நில​வும் குடிநீர்த் தட்​டுப்பாட்​டுக்கு நிரந்​தரத் தீர்வு காணப்படும் என உறு​தி​யளித்​தார்.

உப்​பார் அணைக்கு நீர் கொண்டு வருவதற்​கான திட்​டங்கள் விரைவுபடுத்​தப்​படும் என்​றும், ஆனைமலை​யாறு– நல்​லாறு இணைப்​புத் திட்​டத்தை நிறைவேற்ற நாம் தமிழர் கட்சி தீவிர​மாக பாடு​படும் என்​றும் வாக்​குறுதி அளித்​தார்.

“தி​ரா​விட மற்​றும் தேசிய கட்​சிகளின் பொய் வாக்​குறு​திகளை நம்பி ஏமாந்தது போதும். லஞ்​சம், ஊழலற்ற நேர்​மை​யான நிர்வாகத்தை வழங்​க​வும், மக்​களின் அடிப்​படை வாழ்வாதா​ரப் பிரச்​சினை​களுக்​குத் தீர்வு காணவும் நாம் தமிழர் கட்​சியின் விவ​சாயி சின்​னத்​துக்கு வாக்​களித்து ஆதரவு தரு​மாறு கேட்​டுக்​கொள்​கிறேன்” என வலி​யுறுத்​தி​னார்.

பிரச்​சார நிகழ்​வின் போது கட்சி நிர்​வாகிகள், இளைஞர் பாசறை உறுப்​பினர்கள் மற்​றும் மகளிர் பாசறை​யினர் திரளாகக் கலந்​து​கொண்​டு, கட்​சிச் சின்​னம் பொறித்த துண்​டுப்​ பிரசுரங்​களை விநி​யோகித்​து தீவிர ​வாக்​கு சேகரிப்​பில்​ ஈடுபட்​டனர்​.

<div class="paragraphs"><p>தாராபுரம் அருகே மூலனூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாதக வேட்பாளர் கார்த்திகா. </p></div>
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 15,000 ரன்கள்: டெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in