எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை கட்டுப்படுத்துங்கள்: இலங்கை கடற்படையிடம் வட மாகாண ஆளுநர் வேண்டுகோள்

எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை கட்டுப்படுத்துங்கள்: இலங்கை கடற்படையிடம் வட மாகாண ஆளுநர் வேண்டுகோள்
Updated on
1 min read

ராமேசுவரம்: எல்லை தாண்​டும் தமிழக மீனவர்​களை கட்​டுப்​படுத்த வேண்​டும் என வட மாகாண ஆளுநர் வேத​நாயகன் இலங்கை கடற்​படை​யிடம் வேண்​டு​கோள் விடுத்​தார்.

இலங்கை கடற்​படை​யின் வட மாகாண கடற்​படைத் தளப​தி​யாக பொறுப்​பேற்​றுள்​ள ரியர் அட்​மிரல் விஜேவர்த்​தன, வட மாகாண ஆளுநர் செயல​கத்​தில் வடக்கு மாகாண ஆளுநர் வேத​நாயகனை சந்​தித்து கலந்​துரை​யாடி​னார்.

அப்​போது வட மாகாண ஆளுநர் வேத​நாயகன், வட மாகாண கடற்​படை தளபதி விஜேவர்த்​தன​விடம் தெரி​வித்​த​தாவது: தமிழக மீனவர்​களின் எல்லை தாண்​டிய மீன்​பிடி நடவடிக்​கைகள் வடக்கு மாகாண மீனவர்​களின் வாழ்​வா​தா​ரத்​துக்​கும், கடல்​வளப் பாது​காப்​புக்​கும் தொடர்ச்​சி​யான அச்​சுறுத்​தலை ஏற்​படுத்​துகிறது. குறிப்​பாக, சட்​ட​விரோத மீன்​பிடி முறை​கள் கடல் வளத்தை அழிப்​பதுடன், வட மாகாண மீனவர்​களின் பாரம்​பரிய மீன்​பிடித் தொழிலை​யும் பாதித்து வரு​கின்​றன.

இவ்​வாறான நடவடிக்​கைகளை கட்​டுப்​படுத்​து​வதற்​காக மீன்​வளத் துறை​யுடன் ஒன்​றிணைந்து பணி​களை துரிதப்​படுத்த வேண்​டும். அத்​துடன், கடல் வழி​யாக நாட்​டுக்​குள் போதைப்​பொருட்​கள் கடத்​தப்​படும் முயற்​சிகளை பாது​காப்பு நடவடிக்​கைகளை​யும் மேலும் வலுப்​படுத்த வேண்​டும். இவ்வாறு தெரி​வித்​துள்​ளார்.

இதற்​குப் பதிலளித்த வட மாகாண கடற்​படை தளபதி விஜேவர்த்​தன, வடக்கு மாகாண மக்​களின் பாது​காப்​பு, கடல் வளங்​களின் பாது​காப்பு, சட்​ட​விரோத செயற்​பாடு​களை கட்​டுப்​படுத்​தும் நடவடிக்​கை​களில்​ கடற்​படை முழு​ அர்​ப்​பணிப்​புடன்​ செயல்​படும்​ என்​றார்​.

எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை கட்டுப்படுத்துங்கள்: இலங்கை கடற்படையிடம் வட மாகாண ஆளுநர் வேண்டுகோள்
“இளைஞர்களின் நலனுக்காக தேர்வு முறைகளில் சீர்திருத்தங்கள்...” - குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in