தமிழகம், புதுச்சேரியில் விலகியது வடகிழக்கு பருவமழை!

தமிழகம், புதுச்சேரியில் விலகியது வடகிழக்கு பருவமழை!

Published on

சென்னை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வடகிழக்கு பருவமழை விலகியது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து இன்று விலகியது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (ஜன.20) முதல் ஜன.22-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

ஜன.23 முதல் 25-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நாளை ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை (குளிர்) அளவுகளின்படி அதிகபட்சமாக சமவெளிப்பகுதியான தருமபுரியில் 15.5 டிகிரி செல்சியஸ், மலைப்பகுதியான கொடைக்கானல் மற்றும் உதகமண்டலத்தில் தலா 6.6 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் விலகியது வடகிழக்கு பருவமழை!
2026 பட்ஜெட்: ரூ.17 லட்சம் வரை வருமான வரி விலக்கு வாய்ப்பு? - புதிய முறையில் 5 எதிர்பார்ப்புகள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in