வடசென்னை அனல் மின் நிலைய 3-ம் அலகில் வணிக ரீதியான முழு உற்பத்தி தொடக்கம்

வடசென்னை அனல் மின் நிலைய 3-ம் அலகில் வணிக ரீதியான முழு உற்பத்தி தொடக்கம்

Published on

சென்னை: வடசென்னை அனல் மின் நிலைய 3-ம் அலகில் வணிக ரீதி​யான முழு உற்​பத்தி தொடங்​கப்​பட்​டுள்​ள​தாக மின் வாரி​யம் தெரி​வித்​துள்​ளது. வடசென்னை அனல் மின் நிலை​யம் 3-ல் 800 மெகா​வாட் அளவுக்கு மின்​னுற்​பத்தி செய்ய முடி​யும்.

இந்த அனல் மின் நிலை​யத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கி வைத்​தார். இதையடுத்து அனல் மின் நிலை​யத்​தில் சோதனை ஓட்​டம் உள்​ளிட்ட பணி​கள் தொடர்ச்​சி​யாக மேற்​கொள்​ளப்​பட்​டன.

இந்​நிலை​யில் கடந்த ஆண்டு இறு​தி​யில் வடசென்னை அனல் மின் நிலை​யம் 3-ம் அலகில் வணிக ரீதி​யான முழு மின்​னுற்​பத்​தியை விரை​வில் தொடங்க வேண்​டும் என முதல்​வர் அறி​வுறுத்​தி​யிருந்​தார்.

வணிக ரீதி​யான உற்​பத்தி என்​றால் மின் நிலை​யத்தை முழு​திறனில் 72 மணி நேரம் தொடர்ந்து இயக்க வேண்​டும். இதை பூர்த்தி செய்​தால்​தான் உற்​பத்​தி​யாகும் மின்​சா​ரத்தை விற்க முடி​யும். இதையடுத்து மின்​வாரி​யம் சார்​பில் துரித​மாக பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன.

இந்​நிலை​யில் வடசென்னை அனல் மின் நிலை​யம் 3-ல் வணி​கரீ​தி​யான உற்​பத்தி கடந்த 21-ம் தேதி அதி​காலை 4.30 மணி​முதல் 72 மணி நேரம் தொடர் முழு உற்​பத்​தித் திறன் ஆய்வு சோதனை ஓட்​டம் வெற்​றிகர​மாக நடத்​தப்​பட்டு 24-ம் தேதி காலை 4.30 மணிவரை தொடர்ச்​சி​யாக முழு மின் உற்​பத்தி செய்​யப்​பட்​டது.

இதைத் தொடர்ந்து இந்த அனல் மின் நிலை​யம் கடந்த 24-ம் தேதி​முதல் 800 மெகா​வாட் வணி​கரீ​தி​யான முழு மின்​னுற்​பத்​திக்கு கொண்​டு​வரப்​பட்​டது. மின்​னுற்​பத்தி பணி​களை மின்​வாரி​யத் தலை​வர் ஜெ.​ரா​தாகிருஷ்ணன், நேற்று நேரில் ஆய்வு செய்து வணிக ரீதி​யாக மின்​னுற்​பத்தி மைல்​கல்லை எட்​டியதற்கு இரவு பகல் பாராமல் உழைத்த அனைத்து பொறி​யாளர்​கள், பெல் நிறுவன பணி​யாளர்​கள், ஒப்​பந்​த​தா​ரர்​கள் மற்​றும் அனைத்து பணி​யாளர்​களுக்​கும் இனிப்பு வழங்கி பாராட்​டு​களைத் தெரி​வித்​தார்.

தொடர்ந்து அனல் மின் நிலை​யத்​தின் சுகா​தார மையம், ஆம்​புலன்ஸ் ஆகிய​வற்றை தொடங்கி வைத்​தார். இதுகுறித்து மின் வாரிய தலை​வர் ராதாகிருஷ்ணன் கூறுகை​யில், “எதிர் வரும் கோடைக்​கால மின் தேவையை பூர்த்தி செய்​வ​தில் இந்த அனல் மின் நிலை​யம் முக்​கிய பங்​காற்​றும்.

வடசென்னை அனல் மின்​நிலை​யத்​தில் சுற்​றுப்​புறச் சூழல் பாது​காப்​புக்​காக சுமார் 18 ஆயிரம் மரக்​கன்​றுகள் நடப்​பட்​டுள்​ளன. இன்​னும் 2 ஆண்​டு​களில் 85 ஆயிரம் மரக்​கன்​றுகள் நட நடவடிக்​கை மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது” என்றார்​.

வடசென்னை அனல் மின் நிலைய 3-ம் அலகில் வணிக ரீதியான முழு உற்பத்தி தொடக்கம்
மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in