இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்தது

மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறுகிறது
இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்தது
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் இடைத்​தேர்​தல் நடை​பெறவுள்ள மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய தொகு​தி​களில் வேட்பு மனுத்​தாக்​கல் நிறைவு​பெற்​றன. தொடர்ந்து வேட்​பாளர்​களின் மனுக்​கள் இன்று (செப்​.17) பரிசீலனை செய்​யப்பட உள்​ளன.

தமிழகத்​தில் சட்​டப்​பேரவை பொதுத்​தேர்​தல் கடந்த ஏப்​ரல் 23-ம் தேதி நடை​பெற்​றது. இதில் மது​ராந்​தகம் (தனி) தொகு​தி​யில் மரகதம் குமர​வேல், தாராபுரம் (தனி) தொகு​தி​யில் சத்​ய​பாமா ஆகியோர் அதி​முக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்றனர்.

அதன்​பின் அவர்​கள் தங்​கள் எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு தவெக​வில் சேர்ந்​தனர். அவர்​களின் ராஜி​னாமா ஏற்​கப்​பட்​ட​தால் மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய இரு தொகு​தி​களும் காலி​யான​தாக அறிவிக்​கப்​பட்​டன.

இதைத் தொடர்ந்து இவ்​விரு தொகு​தி​களுக்கு அக்​.6-ம் தேதி இடைத்​தேர்​தல் நடை​பெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்​கான வேட்பு மனு​தாக்​கல் கடந்த செப்.9-ம் தேதி தொடங்கி நேற்​றுடன் முடிவடைந்​தது. இதில் மது​ராந்​தகம் தொகு​தி​யில் அதி​முக, தவெக, திமுக, நாம் தமிழர் கட்சி, மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்​சிகளின் வேட்​பாளர்​கள் மற்​றும் சுயேட்​சைகள் என மொத்​தம் 48 பேர் வேட்பு மனுத்​தாக்​கல் செய்​துள்​ளனர்.

கடைசி நாளான நேற்று மட்​டும் அதி​முக வேட்​பாளர் கணிதா சம்​பத் உள்பட 30-க்​கும் மேற்​பட்​டோர் மனுத்​தாக்​கல் செய்​தனர். ஒரே நாளில் அதி​கம் பேர் கூடிய​தால் 3 மணியை கடந்​தும் மனுத்​தாக்​கல் நடை​பெற்​றது. மேலும், கோட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் கூட்​ட​மும் அதி​கள​வில் காணப்​பட்​டது.

அதேபோல், தாராபுரம் தொகு​தி​யில் கடைசி நாளான நேற்று தவெக வேட்​பாளர் சத்​ய​பா​மா, அதி​முக வேட்​பாளர் பானு​ம​தி, இந்திய கம்​யூனிஸ்ட் கட்சி வேட்​பாளர் லட்​சுமணன், நாதக வேட்​பாளர் கார்த்​திகா மற்​றும் சுயேச்​சைகள் என 34 பேர் வேட்பு மனுத்​தாக்​கல் செய்​தனர்.

ஏற்​கெனவே மனு​தாக்​கல் செய்த திமுக வேட்​பாளர சுகன்யா மற்​றும் 17 சுயேச்​சைகளை​யும் சேர்த்து மொத்​தம் 51 பேர் தாராபுரம் தொகுதியில் போட்டி யிட மனுத்​தாக்​கல் செய்​துள்​ளனர். மனு​தாக்​கலுக்கு முன்​ன​தாகவே தவெக வேட்​பாளர் சத்​ய​பா​மா, அமைச்​சர்​கள் ஆனந்த், செங்​கோட்​டையன், அருண்​ராஜ், லோகேஷ் தமிழ்​செல்​வன், கமலி, விஜயலட்​சுமி, விஜய​பாலாஜி மற்​றும் கட்சி நிர்​வாகி​கள் பலரும் ஊர்​வல​மாக சென்​றனர்.

ஒரே​நாளில் அடுத்​தடுத்து வேட்​பாளர்​கள் மனுத்​தாக்​கல் செய்​த​தால் தாராபுரம் நகரின் முக்​கிய சாலைகள் அரசி​யல் கட்சி தொண்​டர்​களால் நிரம்பி வழிந்​தது.

இதையடுத்து வேட்​புமனுக்​கள் மீதான பரிசீலனை இன்று (செப். 17) நடை​பெறவுள்​ளது. தொடர்ந்து வேட்​புமனுக்​களை திரும்ப பெறு​வதற்​கான கால அவகாசம் செப். 19-ம் தேதி வரை வழங்​கப்​பட்​டுள்​ளது. அதன்​பின் அன்று மாலையே இறுதி வேட்​பாளர் பட்​டியல் வெளி​யிடப்​படும்.

தற்​போதைய நில​வரப்​படி களத்​தில் தவெக, திமுக, அதி​முக, நாதக, கம்​யூனிஸ்ட் கட்​சிகள் என இரு தொகு​தி​களி​லும் 5 முனைப்போட்டி நில​வு​கிறது குறிப்​பிடத்​தக்​கது.

இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்தது
இந்தியாவில் பணிநீக்க நடவடிக்கையை தொடங்கிய அடிடாஸ்: 50% ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in