நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: கிருஷ்ணசாமி அறிவிப்பு

கிருஷ்ணசாமி

கிருஷ்ணசாமி

Updated on
1 min read

“புதிய தமிழகம் கட்சி போட்டியிடாத தொகுதிகளில் திமுக, அதிமுக-வுக்கு எங்களது ஆதரவு கிடையாது.” என அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிடும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி திருநெல்வேலியில் நேற்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர் களிடம் பேசிய கிருஷ்ணசாமி கூறியதாவது: தனித்து போட்டியிடுவது புதிய தமிழகம் கட்சிக்கு புதிது அல்ல.

கடந்த 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி, திமுக வெற்றிக்கு பழனிசாமி வழிவகுத்தார். இந்த தேர்தலில் எங்களோடு 2 முறை பேச்சுவார்த்தை நடத்தி, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவீர்கள் என எழுதி வாங்கிய பின்னரும், கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாக பழனிசாமி அறிவித்துவிட்டார்.

புதிய தமிழகம் கட்சி போட்டியிடாத தொகுதிகளில் திமுக, அதிமுக-வுக்கு எங்களது ஆதரவு கிடையாது. கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் வளரக் கூடாது என்ற நோக்கில் அதிமுக செயல்படுகிறது. ஜெயலலிதாவையும் பழனிசாமியையும் ஒப்பிட முடியாது. அவர்களுக்கு இடையே உள்ள வித்தியாசம், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். நாங்கள் யார் வாக்கையும் பிரிக்கவில்லை. தேவேந்திரகுல வேளாளர்களின் வாக்குகளை ஒற்றுமையாக்குகிறோம். சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>கிருஷ்ணசாமி </p></div>
“முதல்வரின் திறன் பற்றி ஆ.ராசா பேச்சு எங்கள் பிரச்சாரத்துக்கு கூடுதல் பலம்” - அண்ணாமலை கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in