தமிழகத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on: 
1 min read

மதுரை: தமிழகத்தில் ஏற்கெனவே அதிக டாஸ்மாக் கடைகள் இருப்பதால், புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்க கூடாது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திருச்சி நவக்கிணத்துப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: ‘திருச்சி நல்லம்பிள்ளை கிராமம் நவகிநத்துப்பட்டியில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டாஸ்மாக் கடை திறந்தால் கிராமத்தில் பல்வேறு பிரச்சனைகள் வரும், சட்டம் - ஒழுங்கு பாதிப்பு ஏற்படும். எனவே, டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வு இன்று விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், ‘தமிழகத்தில் ஏற்கெனவே அதிகமான டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க வேண்டிய தேவை இல்லை. பொது நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது’ என உத்தரவிட்டனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
“தவெக அரசின் 6 மாத ஆட்சி மக்கள் விரும்பும் திசையில் செல்லவில்லை” - மு.வீரபாண்டியன் விமர்சனம்

X