“தவெக அரசுக்கு ஆபத்து ஏற்படாது” - ஜி.ராமகிருஷ்ணன் கருத்து

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on: 
1 min read

தென்காசி: “தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நவம்பர் புரட்சி தின சிறப்பு பேரவைக் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் உச்சிமாகாளி இதில் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தைத் தொடர்ந்து ஜி.ராமகிருஷ்ணன் கூறும்போது,“தவெக அரசு பொறுப்பேற்று 6 மாதங்களை நிறைவு செய்துள்ளது. விவசாய கடனைத் தள்ளுபடி செய்தது, கரும்பு விலையை உயர்த்தியது, சட்டப்பேரவையில் நீட் விலக்கு, தொகுதி மறுவரையறை மசோதாவை வாபஸ் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது போன்ற மக்களுக்கு சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். சட்டம் - ஒழுங்கை பராமரிக்க இன்னும் கூடுதலாக முயற்சி செய்ய வேண்டும்.

திமுக விரைவில் ஆட்சிக்கு வரும் எனச் சொல்வதும், தவெக எம்எல்ஏக்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாகவும் திமுகவினர் கூறுவது அவர்களின் ஆசையையே குறிக்கிறது. இந்த அரசுக்கு ஆபத்து ஏற்படாது. கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த அரசை வெளியில் இருந்து ஆதரிக்கிறது. இந்த அரசின் நடவடிக்கைகள் மக்கள் நலனுக்கு விரோதமாகவே, மக்களை பாதிக்கும் வகையிலோ இருந்தால் அதை எதிர்த்து தொடர்ச்சியாக இயக்கம் நடத்தி வருகிறோம்.

அமெரிக்க அரசு ஈரானை தாக்குவது, அதனால் ஏற்படும் பிரச்சினைகள் போன்ற நடவடிக்கைகளால் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வுக்கு இது முக்கியமான காரணம். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அத்தியாவசிய பொருட்களை அரசாங்கமே கொள்முதல் செய்து, மக்களுக்கு குறைந்த விலையில் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் பொறுப்பு மத்திய, மாநில அரசுக்கு உள்ளது.

தமிழகத்தில் 6 தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்போது, கட்சியின் நிலைப்பாடு குறித்து மாநில செயற்குழுவும், மாநிலக் குழுவும் முடிவு செய்யும்” என்றார்.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
“என்னை வடிவேலு என்று விமர்சிக்கின்றனர்...” - வைகோ ஆவேசம்

X