

புதுச்சேரி: புதுச்சேரி கைலாச தியான பீடம் கும்பாபிஷேக விழாவில் நித்யானந்தா பங்கேற்க இருப்பதால், அதற்கு பாதுகாப்பு தரக்கோரி முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.
கைலாசா புதுச்சேரி ஆன்மிகக் குழுவினர், முதல்வர் ரங்கசாமியை நேற்று சந்தித்தனர். அப்போது அவரிடம், ‘‘புதுச்சேரியின்ஏம்பலத்தில் உள்ள நித்யானந்தாவின் கைலாச தியான பீடத்துக்கு அடுத்த ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
இதில் சுவாமி நித்யானந்தா பங்கேற்க இருப்பதால் அதற்காக மத்திய அரசிடம் ஏற்பாடுகள் செய்து வருகிறோம். இந்நிகழ்வில் அவர் பங்கேற்கும்போது பாதுகாப்பு அளிக்க வேண்டும்’’ என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
மேலும், கைலாசாவின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பணிகளை விளக்கும் கைலாச புத்தகத்தை முதல்வர் ரங்கசாமியிடம் அளித்து, கைலாசாவுக் கும் புதுச்சேரி அரசுக்கும் இடையே நல்லுறவு மற்றும் நட்புணர்வை மேம்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். முதல்வரைத் தொடர்ந்து, புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிகத் தலைவர் அன்பழகன், அமைச்சர் ராஜவேலு உள்ளிட்ட பலரையும் இந்தக் குழுவினர் சந்தித்து, விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.