நிர்மல் குமார் vs மாணிக்கம் தாகூர்: பிரதமர் வேட்பாளர் விஜய்யா, ராகுலா?

நிர்மல் குமார் vs மாணிக்கம் தாகூர்: பிரதமர் வேட்பாளர் விஜய்யா, ராகுலா?
Updated on
1 min read

விஜய் பிரதமராக வேண்டும் என்பதில் சர்ச்சை இல்லை: நிர்மல் குமார் கருத்து

விடு​தலைப் போராட்ட வீரர் பூலித்​தேவன் 311-வது பிறந்​த​நாள் விழா நேற்று கொண்​டாடப்​பட்​டது. தென்​காசி மாவட்​டம், சிவகிரி வட்​டம், நெல்​கட்​டும்​செவலில் பூலித்​தேவன் நினைவு மாளி​கை​யில் உள்ள அவரது சிலைக்​கு, தமிழக அரசு சார்​பில் அமைச்​சர்​கள் நிர்​மல்​கு​மார், வி.கே.​ராஜீவ் மரி​யாதை செலுத்​தினர்.

பின்​னர், அமைச்​சர் நிர்​மல் ​கு​மார் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: முதல்​வர் விஜய் பிரதம​ராக வேண்​டும் என்று கூறு​வ​தில் எந்த சர்ச்​சை​யும் இல்​லை. தமிழகத்​தில் இருந்து ஒரு​வர் பிரதம​ராக வேண்​டும் என்று எல்​லோரும் ஆசைப்​படு​வது இயல்​பு​தான். இயற்கை ஒரு விஷ​யத்தை தானாகவே உரு​வாக்​கும். இதை விவா​திக்க வேண்டிய அவசி​யம் இல்​லை. கூட்​ட​ணி​யில் எந்த முரணும் இல்​லை. மின் உற்​பத்தி திட்​டங்​களில் தனி​யார் பங்​களிப்பை அனு​ம​திப்​பது அவசி​யம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் மாணிக்கம் தாகூர் திட்டவட்டம்

​ராகுல் காந்தி பிரதமர் வேட்​பாளர் என்​ப​தில் எந்த சந்​தேக​மும் இல்லை என தமிழக காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர் கூறினார்.

தென்காசி நெல்​கட்​டும்​செவலில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​து: சட்​டப்​பேரவைத் தலை​வர் நடுநிலை யோடு செயல்​படுவது பாராட்​டுக்​குரியது. பேர​வையில் ரீல்​ஸ்​களுக்​காக சில விஷ​யங்கள் நடைபெறுகின்​றன. ராகுல் காந்தி பிரதமர் வேட்​பாளர் என்​ப​தில் எந்த சந்​தேக​மும் இல்​லை. தமிழக முதல்​வ​ராகவிஜய் தொடர வேண்​டும்.

ஊழலற்ற ஆட்​சியை அவர் தொடர்ந்து வழங்க காங்​கிரஸ் துணை நிற்​கும். விஜய், ராகுல் காந்​திக்கு இடையே​யான உறவு சகோ​தரத்​து​வத்​துடன் பலமாக உள்​ளது. நாங்​கள் பாஜக​வுக்கு எப்​போதும் எதி​ரானவர்​கள். நம்பி வந்​தவர்​களுக்​காக உயிரை​யும் கொடுப்​பவர்​கள் காங்​கிரஸ் கட்​சிக்​காரர்​கள். இவ்​வாறு அவர் கூறி​னார்.

நிர்மல் குமார் vs மாணிக்கம் தாகூர்: பிரதமர் வேட்பாளர் விஜய்யா, ராகுலா?
விவசாயி வீட்டுக்குச் சென்ற முதல்வர் விஜய்: மூதாட்டிக்கு கூலிங் கிளாஸ் அணிவித்து மகிழ்ச்சி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in