“தமிழகத்தில் இண்டியா கூட்டணியில் பிளவு” - நிர்மலா சீதாராமன் விமர்சனம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் இண்​டியா கூட்​ட​ணி​யில் பிளவு ஏற்​பட்​டுள்​ளது. காங்​கிரஸ் கட்சி இன்​னும் ஊசலாட்​டத்​தில் இருப்​ப​தாக மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் விமர்​சித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் பிடிஐ-க்கு அளித்​துள்ள பிரத்​யேக நேர்​காணலில் கூறிய​தாவது: தமிழக அரசி​யலில் நடிகர் விஜய்​யின் வருகை தேர்​தல் களத்​தில் பெரும் சலசலப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. அவருக்கு எந்​தளவுக்கு செல்​வாக்கு இருக்​கும் என்​பதை தேர்​தல் முடிவு​களே தீர்​மானிக்​கும். இருப்​பினும், விஜய்​யின் வருகை திமுகவை கலக்​கமடையச் செய்​துள்​ளது என்​பது வெளிப்​படை.

தமிழகத்​தில் போதைப்​பொருள் புழக்​கம், பட்​டியலினத்​தவர் மற்​றும் பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​கள் அதி​கரித்​துள்​ளன. பல்​கலைக்​கழக வளாகங்​கள் பாது​காப்​பற்ற இடங்​களாக மாறி வரு​கின்​றன. சமூக நீதி பேசும் திமுக அரசு, இந்​தக் குற்​றங்​களைத் தடுக்​கத் தவறி​விட்​டது. போதைப்​பொருள் மாஃபி​யாக்​களுக்​கும், அதி​கார மட்​டத்​தில் இருப்​பவர்​களுக்​கும் உள்ள தொடர்பு குறித்து எழுப்​பப்​படும் கேள்வி​களுக்கு இது​வரை விடை கிடைக்​க​வில்​லை.

தமிழகத்​தில் காங்​கிரஸ் கட்​சி​யின் நிலைப்​பாடு கேள்விக்​குறி​யாக தொடர்​கிறது. 50 ஆண்​டு​களுக்​கும் மேலாக ஆட்​சி​யில் இல்​லாத ஒரு தேசி​யக் கட்சி இப்​போதும் கூட்​ட​ணியை மட்​டுமே நம்பி இருக்​கிறது. தேர்​தலுக்கு இன்​னும் சில மாதங்​களே உள்ள நிலை​யில், திமுக​வுடன் தொடர்​வதா அல்​லது தனித்​துப் போட்​டி​யிடு​வதா என்​ப​தில் காங்​கிரஸிடம் தெளி​வில்​லை.

ஐந்து ஆண்​டு​கள் ஒன்​றாகத் தேர்​தலைச் சந்​தித்​தவர்​கள், இப்​போது ஏன் தயக்​கம் காட்​டு​கிறார்​கள். இது இண்​டியா கூட்​டணி இன்​னும் வலு​வாக உள்​ளதா என்ற ஐயத்தை எழுப்​பி​யுள்​ளது.இவ்​வாறு நிர்​மலா சீதா​ராமன் தெரி​வித்​தார்.

விஜய்​யுடன் பாஜக கூட்​டணி வைக்​குமா என்ற கேள்விக்கு, “கூட்டணிக்கு யார் வந்தாலும் வரவேற்போம். அதே சமயம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகவும் ஒற்றுமையுடன் இலக்கை நோக்கி துரிதமாக முன்னேறி வருகிறது” என அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
5 ஆண்டுகளில் 70,000+ படங்களுக்கு தணிக்கை சான்றிதழ்: எல்.முருகன் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in