திருச்சி துறையூர், விருதுநகர் நரிக்குடி வெடிமருந்து ஆலைகளில் கேரள மாநில என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

திருச்சி துறையூர், விருதுநகர் நரிக்குடி வெடிமருந்து ஆலைகளில் கேரள மாநில என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
Updated on
1 min read

திருச்சி/ விருதுநகர்: கேரள மாநிலம் மலப்​புரத்​தில் லாரி​யில் வெடிபொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்ட சம்​பவம் தொடர்​பாக, திருச்சி மாவட்​டம் துறையூர், விருதுநகர் மாவட்​டம் நரிக்​குடி அருகே அகத்​தாகுளத்​தில் உள்ள வெடிமருந்து ஆலைகளில் கொச்​சியைச் சேர்ந்த என்ஐஏ அதி​காரி​கள் நேற்று விசா​ரணை மேற்​கொண்​டனர்.

கேரள மாநிலம் மலப்​புரம் மாவட்​டம் செம்​மண்ட் பகு​தி​யில் கடந்த பிப்​ர​வரி​யில் வெங்​கா​யம் ஏற்​றிச் சென்ற லாரி​யில் போலீ​ஸார் சந்​தேகத்​தின்​பேரில் நடத்​திய சோதனை​யில் 10 ஆயிரம் ஜெலட்​டின் குச்​சிகள், டெடனேட்​டர்​கள் போன்ற வெடிபொருட்​கள் கைப்​பற்​றப்​பட்​டன. இதுதொடர்​பாக கொச்​சி​யைச் சேர்ந்த தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தினர். இதில், கைப்​பற்​றப்​பட்ட வெடிபொருட்​கள், தமிழகத்​தில் திருச்​சி, விருதுநகர், கர்​நாடக மாநிலம் மிசாப்​பூர் ஆகிய இடங்​களில் உள்ள 3 வெடிமருந்து நிறு​வனங்​களில் தயாரிக்​கப்​பட்​டவை என்​பது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, திருச்சி மாவட்​டம் துறையூர் அருகே முருங்​கப்​பட்​டி​யில் செயல்​பட்டு வரும் வெடிமருந்து தொழிற்​சாலை​யிலும் விருதுநகர் மாவட்​டம் நரிக்​குடி அருகே அகத்​தாகுளத்​தில் உள்ள சேலம் ஸ்ரீரெங்​க​பாளை​யத்​தைச் சேர்ந்த சந்​தோஷ் சிவன் என்பவருக்​குச் சொந்​த​மான வெடிமருந்து ஆலையிலும் நேற்று ஒரேநேரத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்​தினர்.

திருச்சி துறையூர், விருதுநகர் நரிக்குடி வெடிமருந்து ஆலைகளில் கேரள மாநில என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
அஜித் தாயார் மறைவு: முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in