கேரளாவில் சிக்கிய ஜெலட்டின் வெடிபொருள்: திருச்சி, விருதுநகரில் என்ஐஏ சோதனை

திருச்சி  வெடிப்பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை

திருச்சி வெடிப்பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை

Updated on
2 min read

திருச்சி: கேரளாவில் கிடைத்த ஜெலட்டின் உள்ளிட்ட வெடிப்பொருட்களை தயாரித்த திருச்சி வெடிமருந்து தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் கொச்சினை சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கேரளா மாநிலம் மலப்புரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு லாரி நிறைய வெடி மருந்துகள் சிக்கின. அந்த லாரியில் இருந்த வெடி மருந்துகளை கைப்பற்றி கொச்சினை சேர்ந்த தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், அவை தமிழகத்தில் திருச்சி, விருதுநகர், கர்நாடக மாநிலத்தில் மிசாப்பூர் ஆகிய இடங்களில் உள்ள 3 வெடி மருந்து நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட வெடி மருந்துகள் என்பதை கண்டறியப்பட்டது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முருங்கப்பட்டியில் செயல்பட்டு வரும் வெற்றிவேல் எக்ஸ்ப்ளோசிவ் எனப்படும் தொழிற்சாலையில் கல்குவாரிகள் மற்றும் கிணறுகள் தோண்ட பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிப்பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலைக்கு கொச்சினை சேர்ந்த 5 என்ஐஏ அதிகாரிகள் காலை 6 மணிக்கு வருகை தந்தனர்.

தொழிற்சாலைக்குள் சென்ற அதிகாரிகள் வெடி மருந்துகள் தயாரிப்பு, விநியோகம் குறித்த பதிவேடுகளை தொடர்ந்து ஆய்வு செய்தனர். இவர்களின் பாதுகாப்புக்காக தமிழ்நாடு சிறப்பு அதிரடி காவல் படையினர் ஒரு பேருந்தில் வந்திருந்தனர். தொழிற்சாலையை சுற்றி அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சோதனை காரணமாக, பத்திரிக்கையாளர்கள் உட்பட வெளியாட்களை தொழிற்சாலை செயல்படும் பகுதிக்குள் போலீஸார் அனுமதிக்கவில்லை.

கடந்த 2016-ம் ஆண்டு இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் பணியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உடல் சிதறி பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, தமிழகத்தில் விருதுநகரில் உள்ள ஒரு வெடிமருந்து தொழிற்சாலை, கர்நாடக மாநிலம் மிசாப்பூரில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலை என மொத்தம் 3 தொழிற்சாலைகளிலும், ஜெலட்டின் உள்ளிட்ட வெடிப்பொருட்கள் சட்டவிரோதமாக விநியோகம் செய்யப்பட்டது குறித்து கொச்சினை சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள் ஒரேநேரத்தில் தீவிர சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

<div class="paragraphs"><p>விருதுநகரில்...</p></div>

விருதுநகரில்...

விருதுநகரிலும் சோதனை:

முன்னதாக, விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட டெட்டனேட்டர்கள் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள அகத்தாகுளத்தில் சேலம் ஸ்ரீரெங்கபாளையத்தைச் சேர்ந்த சந்தோஷ்சிவன் என்பவருக்குச் சொந்தமான வெடிமருந்து ஆலையில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.

மேலும், 2028-ம் ஆண்டு வரை இந்த ஆலைக்கு உரிமம் உள்ளதும், ஆண்டுக்கு சுமார் 4.50 கோடி எண்ணிக்கையிலான டெட்டனேட்டர்களை தயாரிக்க முடியும் என்பதும், நைட்ரேட் உள்ளிட்ட வெடி பொருள்களை ஆண்டுக்கு சுமார 3 ஆயிரம் மெட்ரிக் டன் வரை உற்பத்தி செய்ய முடியும் திறன் கொண்டது என்பதும் தெரியவந்தது.

அதோடு, அகத்தாகுளத்திலிருந்து தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு டெட்டனேட்டர்கள் அனுப்பிவைக்கப்பட்டது தெரியவந்தது. அதையடுத்து, அகத்தாகுளத்தில் உள்ள வெடிமருந்து ஆலை மற்றும் குடோனில் கேரளாவைச் சேர்ந்த தேசிய புலனய்வு முகமையின் 5 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை முதல் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.

<div class="paragraphs"><p>திருச்சி  வெடிப்பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை</p></div>
‘சென்னை முதல் தேனி வரை...’ - குற்றச் சம்பவங்களை அடுக்கி தவெக அரசு மீது பிரேமலதா விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in