

சென்னை: டிஎன்பிஎஸ்சி செயலாளராக இருந்த எஸ்.கோபாலசுந்தரராஜ் இடமாற்றம் செய்யப்பட்டார்.இதையடுத்து புதிய செயலாளராக பானோத் ம்ருகேந்தர் லால் நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 5-ம் தேதி பொறுப்பேற்றார். அவருக்கு டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.சண்முகசுந்தரம் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.