கிராம சபைக் கூட்டம் நடத்த புதிய கட்டுப்பாடு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on: 
1 min read

சென்னை: கிராம சபைக் கூட்​டங்​களை மதம் சார்ந்த கட்​டிடங்​கள் அல்​லது வளாகத்​தில் நடத்​தக் கூடாது என்று ஊரக வளர்ச்​சித் துறை உத்​தர​விட்​டுள்​ளது.

இது​குறித்து ஊரக வளர்ச்​சித்துறை ஆணை​யர் வி.அமுதவல்லி ஆட்சி​யர்​களுக்​கு அனுப்​பிய சுற்​றறிக்​கை: உள்​ளாட்சி தினமான நவ.1-ம் தேதி அனைத்து கிராம ஊராட்​சிகளி​லும் கிராமசபைக் கூட்​டம் நடத்​தப்​பட வேண்​டும். கூட்​டங்​களை நடத்​து​வதற்கு தேவை​யான குறைந்​த​பட்ச உறுப்​பினர்​களின் வருகையை உறுதிசெய்ய வேண்​டும். மக்​கள் பங்​கேற்​கும் வகை​யில், கூட்​டம் நடை​பெறும் இடம் மற்​றும் நேரம் குறித்த தகவல்​களை அந்​தந்த ஊராட்சி அமைப்​பினர் தங்​கள் பகுதி மக்​களுக்கு முன்​கூட்​டியே தெரியப்​படுத்த வேண்​டும்.

குறிப்​பாக, கிராம சபைக் கூட்​டங்​களை எந்​தவொரு மதம் சார்ந்த வளாகங்​களில் நடத்தக் கூடாது. தொடர்ந்து, கிராம சபைக்

கூட்ட நிகழ்​வு​களை ‘நம்ம கிராம சபை’ செயலி​யில் பதிவேற்​றம் செய்து, அதுகுறித்த அறிக்​கையை நவ.1-ம் தேதியே இயக்​குநரகத்​துக்கு அனுப்பி வைக்க வேண்​டும்.

இந்த முறை கூட்​டத்​தின் விவாதங்​கள் மற்​றும் நிகழ்​வு​களை காணொலியாக பதிவு செய்து சபாசார் வலைத்​தளத்​தில் பதிவேற்​றினால், ஏஐ தொழில்​நுட்​பத்​தின் உதவியுடன் தானாகவே அறிக்கை தயாராகி​விடும். இந்த வசதியை ஊராட்​சிகள் பயன்​படுத்த வேண்​டும்.

சாதிப்பெயர்​களை அடை​யாளமாகக் கொண்​டுள்ள ஊர்​கள், சாலைகள் மற்​றும் தெருக்​களின் பெயர்​களை மாற்​று​வது தொடர்​பாக கிராம சபையில் விவாதித்து ஒப்​புதல் பெற வேண்​டும். தங்​கள் கிராமம் அல்​லது வார்​டில் கொத்​தடிமை மற்​றும் குழந்​தைத் தொழிலா​ளர்​கள் இல்லை என தீர்​மானம் நிறைவேற்ற வேண்​டும்.

வடகிழக்​குப் பரு​வ​மழையை எதிர்​கொள்​ளும் வகை​யில் மழைநீர் வடிகால்​களை தூர்​வாருதல், மணல் மூட்​டைகளை தயார்​நிலை​யில் வைத்​தல், குடிநீர் தொட்​டிகளில் குளோரின் கலப்​பது, டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை துரிதப்​படுத்​து​வது குறித்து விவாதிக்க வேண்​டும்.

அதேபோல், தகுதி​யானவருக்​கு மகளிர் உரிமைத் தொகை, முதி​யோர் ஓய்​வூதி​யம், பட்டா, ரேஷன் கார்டு உள்​ளிட்ட உரிமை​கள் கிடைப்​பதை உறுதிசெய்ய வேண்​டும். மேலும் மண்​பாண்​டங்​கள், பனைப் பொருட்​கள் உள்​ளிட்ட தொழில்​களை ஊக்​கு​விக்க கிராம சபையில் ஒப்​புதல் பெற வேண்​டும்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரி வழக்கு: மத்திய அரசு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in