மாவட்ட நூலக அலுவலர் பதவிக்கு புதிய கல்வித் தகுதி நிர்ணயம்: டிஎன்பிஎஸ்சி மூலம் விரைவில் நேரடி நியமனம்

டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி
Updated on
1 min read

சென்னை: ​மாவட்ட நூலக அலு​வலர் பதவிகளுக்கு புதிய கல்​வித்​தகுதி நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இதைத்​தொடர்ந்​து, டிஎன்​பிஎஸ்சி மூலம் விரை​வில் நேரடி நியமனம் மேற்​கொள்​ளப்​பட​வுள்​ளது.

தமிழக அரசின் பொது நூல​கத்துறை​யின்​கீழ் பகுதி நேர நூல​கங்​கள், ஊர்ப்​புற நூல​கங்​கள், நடமாடும் நூல​கங்​கள், கிளை நூல​கங்​கள், முழுநேர கிளை நூல​கங்​கள், மாவட்ட நூல​கங்​கள் என பல்​வேறு நிலைகளில் 4,661 நூல​கங்​கள் இயங்கி வரு​கின்​றன. இந்த நூல​கங்​களில் பகு​தி நேர நூல​கர், ஊர்ப்​புற நூல​கர், கிளை நூல​கர், நூல​கர் (கிரேடு-3), நூல​கர் (கிரேடு-2), நூலக ஆய்​வாளர் அல்​லது நூல​கர் (கிரேடு-1), மாவட்ட நூலக அலு​வலர் என வெவ்​வேறு பதவி​களில் நூல​கர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர்.

மாவட்ட நூலக அலு​வலர் பதவி​யானது 75 சதவீதம் பதவி உயர்வு மூல​மாக​வும், 25 சதவீதம் நேரடி நியமன முறை​யிலும் நிரப்​பப்​படு​கிறது. அந்த வகை​யில் டிஎன்​பிஎஸ்சி மூலம் நேரடி​யாக நிரப்​பப்​படும் மாவட்ட நூலக அலு​வலர் பதவிக்கு கல்​வித் தகு​தி​யாக பட்​டப்​படிப்​பும், நூலக அறி​வியலில் முது​நிலை பட்​ட​மும் நிர்​ண​யிக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில், நேரடி மாவட்ட நூலக அலு​வலர் பதவிக்கு புதிய கல்​வித்​தகுதி நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​திரமோகன் வெளி​யிட்​டுள்ள அரசாணை​யில் கூறியிருப்பதாவது: தமிழ்​நாடு கல்​விப்​பணி​யின்​கீழ் வரும் மாவட்ட நூலக அலு​வலர் (நேரடி நியமனம்) பதவிக்கு நூலக அறி​வியல் அல்​லது நூல​கம் மற்​றும் தகவலியல் பாடத்​தில் முதுகலை பட்​ட​மும் அதோடு கூடு​தலாக ஏதேனும் ஒரு முதுகலை பட்​ட​மும் பெற்​றிருக்க வேண்​டும்'' எனக் கூறப்​பட்​டுள்​ளது.

விரை​வில் நேரடி நியமனம்: மாவட்ட நூலக அலு​வலர் நேரடி நியமனத்​துக்கு புதிய கல்​வித்​தகுதி நிர்​ண​யிக்​கப்​பட்டு அரசாணை வெளி​யிடப்​பட்​டிருப்​ப​தால் டிஎன்​பிஎஸ்சி வாயி​லாக விரை​வில் மாவட்ட நூலக அலு​வலர் பதவி நிரப்​பப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. மாவட்ட நூலக அலு​வலர் பதவி, டிஎன்​பிஎஸ்சி நடத்​தும் ஒருங்​கிணைந்த தொழில்​நுட்​பப் பணி​கள் தேர்​வின் (நேர்​காணல் உள்ள பதவி​கள்) கீழ் வரும்.

2026-ம் ஆண்​டுக்​கான டிஎன்​பிஎஸ்சி வரு​டாந்​திர தேர்வு அட்​ட​வணை​யின்​படி, ஒருங்​கிணைந்த தொழில்​நுட்​பத் தேர்​வுக்​கான (நேர்​காணல் உடைய பதவி​கள்) அறிவிக்கை ஆகஸ்ட் மாதம் வெளி​யிடப்​பட்டு அதற்​கான தேர்வு நவம்​பரில் நடத்​தப்​படும் எனக் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. எனவே, அந்த அறிவிக்​கை​யில் மாவட்ட நூலக அலு​வலர் பதவி​யும் இடம்​பெறலாம். தமிழகத்​தில் 15-க்​கும் மேற்​பட்ட மாவட்​டங்​களில் மாவட்ட நூல​கர் பதவி நீண்ட கால​மாக காலி​யாக இருந்து வரு​கிறது. அப்​ப​தவி​களை கிரேடு-1 நூல​கர்​கள் மற்​றும் நூலக ஆய்​வாளர்​கள் கூடு​தல் பொறுப்​பாக கவனித்து வரு​கின்​றனர்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

டிஎன்பிஎஸ்சி
அமைச்சர் துரைமுருகன், முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு உட்பட 13 பேருக்கு தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in