புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நெருங்கு​வ​தால் அதிக மழை பெய்ய வாய்ப்பு

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நெருங்கு​வ​தால் அதிக மழை பெய்ய வாய்ப்பு
Updated on
1 min read

திருச்சி: இலங்கை அருகே உரு​வான புதிய காற்​றழுத்த தாழ்வு மண்​டலம் தமிழகத்தை நெருங்​கு​வ​தால் வரும் நாட்​களில் அதிக மழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக தனி​யார் வானிலை ஆய்​வாளர் ந.செல்​வகு​மார் தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் கூறி​யுள்​ள​தாவது: மலேசியா மற்​றும் சுமத்ரா தீவு​களுக்கு இடைப்​பட்ட மலாகா ஜலசந்​தி​யில் உரு​வாகி​யுள்ள காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி அதே இடத்​தில் நீடிக்​கிறது. இது மேற்​கு, வடமேற்கு திசை​யில் நகர்ந்து தீவிரமடைந்து வங்​கக் கடலில் புய​லாக மாறும் என்று வானிலை வல்​லுநர்​கள் கணித்​துள்​ளனர்.

அதே​நேரத்​தில், மலாகா ஜலசந்தி தாழ்வு பெரிய அளவுக்கு தீவிரம் அடை​யாமல், அதே இடத்​தில் நீடிக்​கவே அனைத்து வானிலை காரணி​களும் சாதக​மாக உள்​ளன. எனவே, தெற்கு அந்​த​மான் வழி​யாக எதிர்​பார்க்​கும் காற்​றழுத்த தாழ்​வுநிலை இப்​போதைக்கு வர வாய்ப்​பில்​லை. மாறாக, குமரிக்​கடலை ஒட்​டிய பகு​தி​யில் நிலை​கொண்​டிருந்த காற்​றழுத்த தாழ்​வுநிலை தற்​போது இலங்கை அருகே நீடிக்​கிறது.

இது இன்று அல்​லது நாளை (நவ.24, 25) தாழ்வு மண்​டல​மாக தீவிரமடை​யும். இதன் காரண​மாக, தமிழகத்​தில் பெய்​து​வரும் மழை இன்​றும், நாளை​யும் சற்று தீவிரமடை​யும். மேலும், அனைத்து மாவட்​டங்​களுக்​கும் பரவலான மழைப்​பொழிவை கொடுக்​கும். டெல்டா மற்​றும் தென் மாவட்​டங்​களில் கனமழை பெய்​யும். கடலோரம் மற்​றும் தென் மாவட்ட மேற்​குத் தொடர்ச்சி மலைப் பள்​ளத்​தாக்​குப் பகு​தி​களில் அதி கனமழைக்கு வாய்ப்​புள்​ளது.

இன்று (நவ 24) சென்னை உள்​ளிட்ட வட கடலோரப் பகு​தி​களில் விட்​டு​விட்டு மித​மான மழை இருக்​கும். இலங்கை அருகே உரு​வாகி​யுள்ள காற்​றழுத்த தாழ்வு வரும் 27-க்​குப் பிறகு காற்​றழுத்த தாழ்வு மண்​டல​மாக தீவிரமடைந்து காவிரி டெல்டா மாவட்​டங்​கள் மற்​றும் வட கடலோர மாவட்​டங்​களின் கரைக்கு நெருக்​க​மாக நகர்ந்​து, 3 நாட்​களுக்கு டெல்டா மாவட்​டங்​கள் முதல் சென்​னை, திரு​வள்​ளூர் வரை இடை​வி​டாது அதிக மழைப்​பொழிவை கொடுக்​கும்.

அதே​நேரத்​தில், வட உள்​மாவட்​டங்​களில் கன மற்​றும் மிக கனமழை​யும், பிற மாவட்​டங்​களில் அதிக மழை​யும் பெய்​யும். நாகை முதல் திரு​வள்​ளூர் வரை மழைப் பாதிப்பு ஏற்​படலாம். இலங்​கை​யைக் கடந்து தமிழகத்​தின் வட கடலோரம் வரை புயல் பாதிப்பு இல்​லாத மழை தரும் நிகழ்​வாக இது இருக்​கும்.

மழை பாதிப்பை தடுக்க முன்​னெச்​சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்​டிய நிலை ஏற்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in