22 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமி தற்கொலை - ‘ஜெம்’ வீரமணி மீது புதிய போக்சோ வழக்கு

விசாரணையை தீவிரப்படுத்தும் சிறப்பு புலனாய்வுக் குழு
22 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமி தற்கொலை - ‘ஜெம்’ வீரமணி மீது புதிய போக்சோ வழக்கு
Updated on: 
2 min read

சென்னை: சிறுமி தற்​கொலை செய்து கொண்ட வழக்​கில், 22 ஆண்​டு​களுக்​குப் பிறகு ‘ஜெம்’ வீரமணி மீது புதிய போக்சோ வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

சிறுமிகளை பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக ‘ஜெம் கிரானைட்’ உரிமை​யாளர் வீரமணி, அவருக்கு உடந்​தை​யாக இருந்​த​தாக சாந்​தி, அவரது கணவர் மகேந்​திர சிம்​மன் அடுத்​தடுத்து கைது செய்​யப்​பட்​டனர். மேலும், வீரமணி​யின் மற்​றொரு உதவி​யாளர் கணேசனும் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

இந்த வழக்​கின் பின்​னணி​யில் பணம் பறிக்​கும் கும்​பல், போலீஸ் அதி​காரி​கள், முக்​கிய பிர​முகர்​களின் தலை​யீடு உள்பட பல்​வேறு தொடர்​பு​கள் இருந்​த​தாகக் குற்​றச்​சாட்டு எழுந்​தது. இதையடுத்​து, இந்த வழக்கு குறித்து விசா​ரிக்க சிறப்பு புல​னாய்​வுக் குழு (எஸ்​ஐடி) அமைக்​கப்​பட்​டது.

இதில், சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு கூடு​தல் காவல் ஆணை​யர் தேன்​மொழி உள்பட 4 பெண் போலீஸ் அதி​காரி​கள் இடம்​பெற்​றுள்​ளனர். அவர்​களுக்கு உதவும் வகை​யில் மேலும் 6 பெண் டிஎஸ்​பி-க்​கள் நியமிக்​கப்​பட்​டனர்.

வீரமணி​யிடம் ஏற்​கெனவே போலீஸ் காவலில் விசா​ரணை நடத்தி முடிக்​கப்​பட்டு விட்​டது. இதையடுத்து அடுத்​தகட்ட விசா​ரணையை தொடங்​கிய சிறப்பு புல​னாய்வு குழு​வினர் இந்த வழக்​கில் தொடர்​புடைய மேலும் சிலருக்கு நேரில் விசா​ரணைக்கு ஆஜராகும்​படி சம்​மன் அனுப்பி உள்​ளனர்.

இந்​நிலை​யில், ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. 22 ஆண்​டு​களுக்கு முன்பு 16 வயது சிறுமி தற்​கொலை செய்து கொண்ட சம்​பவத்​தில், தற்​போது ‘ஜெம்’ வீரமணி மீது வழக்கு பாய்ந்​துள்​ளது.

அதாவது, கடந்த 2004-ம் ஆண்டு சென்னை ஐஸ் ஹவுஸ் பகு​தி​யைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒரு​வர் தற்​கொலை செய்​திருந்​தார்.

அந்த வழக்​கில், கல்வி உதவி​கள் வழங்கி தனது மகளை வீட்​டுக்கு வரவழைத்து வீரமணி பாலியல் தொல்லை கொடுத்​த​தால், தனது மகள் வீட்​டுக்கு வந்​தவுடன் தூக்​கிட்டு தற்​கொலை செய்து கொண்​ட​தாக அந்​தச் சிறுமி​யின் பெற்​றோர் 2004-ம் ஆண்டு ஐஸ் ஹவுஸ் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தனர்.

அப்​போது சந்​தேக மரணம் பிரி​வின்​கீழ் வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்டு விசா​ரணை மேற்​கொள்​ளப்​பட்டு வந்​தது. 2017-ல் நடந்த ஜல்​லிக்​கட்டு கலவரத்​தில் ஐஸ் ஹவுஸ் காவல் நிலை​யம் எரிந்​த​தில் அந்த வழக்கு ஆவணங்​கள் எரிந்து விட்​ட​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர். இதனால் அந்த வழக்கு கிடப்​பிலேயே போடப்​பட்​டிருந்​தது.

இந்​நிலை​யில், ஜெம் வீரமணி​யால் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் புகார் அளிக்​கலாம் என போலீ​ஸார் தெரி​வித்​திருந்​தனர். அதைத்​தொடர்ந்​து, சம்​பந்​தப்​பட்ட சிறுமி​யின் தாய், நேற்று சிறப்பு புல​னாய்வு குழு​விடம் நேரில் புகார் தெரி​வித்​தார்.

அதில், ‘தன் மகளை பாலியல் தொல்லை செய்து அவர் இறப்​புக்கு காரண​மான வீரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்’ என தெரி​வித்​திருந்​தார். இதையடுத்து வீரமணி மீது புதி​தாக மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

ஏற்​கெனவே ‘ஜெம்’ வீரமணிக்கு எதி​ராக 15 சிறுமிகள், பெண்​கள் புகார் அளித்​துள்​ள​தாகக் கூறப்​படும் நிலை​யில், மீதம் உள்ள குற்​றச்​சாட்​டு​கள் குறித்​தும் சிறப்பு புல​னாய்​வுக் குழு​வினர் விசா​ரித்து வரு​கின்​றனர்.

இதற்​கிடையே, ‘ஜெம்’ வீரமணி வழக்​கு​கள் தொடர்​பாக புகார் அளிக்க விரும்​பும் பொது​மக்​கள் மற்​றும் இவ்​வழக்​குக்கு தொடர்​புடைய தகவல்​கள், உண்​மை​கள், ஆவணங்​கள் அல்​லது பிற முக்​கிய விபரங்​கள் ஏதேனும் தெரிந்​திருப்​பின், அவற்றை 9345319676 என்ற செல்​போன் எண்​ணில் நேரடி​யாகவோ, வாட்​ஸ்​அப் மூல​மாகவோ தெரிவிக்​கலாம். தகவல் கொடுப்​பவர்​கள் பற்​றிய விவரங்​கள் ரகசி​ய​மாகவைக்​கப்​படும்.

மேலும், அதுகுறித்து உடனடி நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும் என சிறப்பு புல​னாய்​வுக்​ குழு தெரி​வித்​துள்​ளது. இதனால்​, இந்​த வழக்​கு மேலும்​ தீ​விரமடைந்​துள்​ளது.

22 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமி தற்கொலை - ‘ஜெம்’ வீரமணி மீது புதிய போக்சோ வழக்கு
மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் தரிசனம்: கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in