‘மேதகு நாம் தமிழர்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடக்கம் - ராமநாதபுரம் நாதகவில் நடப்பது என்ன?

ராமேசுவரத்தில் நடைபெற்ற மேதகு நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் பங்கேற்றோர்.

ராமேசுவரத்தில் நடைபெற்ற மேதகு நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் பங்கேற்றோர்.

Updated on
1 min read

ராமேசுவரம்: நாம் தமிழர் கட்சியின் ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி நிர்வாகிகள், அக்கட்சி யிலிருந்து விலகுவதாக அறிவித் துள்ளனர். மேதகு நாம் தமிழர் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கண்.இளங்கோ தலைமையில் ராமேசுவரத்தில் நேற்று கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் சத்யா, மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் தீன், நம்பு குமார், மாநில மாணவர் பாசறை செயலாளர்கள் சங்கீதா, பாலு, மாநில மகளிர் பாசறை செயலாளர் ஜெயா, மாநில வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர் செல்வம், நகரத் தலைவர் செந்தில், நகர் செயலாளர் மாரிமுத்து, நகர் செய்தித் தொடர்பாளர் பாலராசு, நகர் இளைஞர் பாசறை செயலாளர் குட்டிமணி, ஆட்டோ ஓட்டுநர் சங்க செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு விலகுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், ‘மேதகு நாம் தமிழர் கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினர்.

மேதகு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக கண்.இளங்கோ, பொதுச் செயலாளராக மாரியம்மாள், பொருளாளராக காதர், செய்தித் தொடர்பாளராக நியூமன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.

புதிய கட்சியை தொடங்கியது குறித்து கண்.இளங்கோ கூறிய தாவது: திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி செயல்படும் என்று எதிர்பார்த் தோம். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. கட்சியில் ஜனநாயகம் இல்லை.

கட்சியின் தலைமை, ஒரு போலி தலைமையாக உள்ளது. இயற்கை வளங்கள் சுரண்டலுக்கு எதிரான போராட்டம் எல்லாம் போலி யான போராட்டங்களாக உள்ளன.

அவை வெறுமனே செய்திகளுக்காக நடைபெறும் போராட்டங்கள். வெறுமனே பேசினால் மட்டுமே ஆட்சியை பிடித்து விடலாம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை நம்புகிறது. அதிகாரத்தை கைப்பற்ற தேவையான அரசியல் போராட்டங்களை நடத்த முன் வரவில்லை.

வேட்பாளர்களாக கட்சியில் சிறப்பாக வேலை செய்பவர்களை தேர்ந் தெடுப்பது இல்லை. வேட் பாளராக தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவரை தேர்வு செய்கின்றனர்.

அல்லது, வெளிநாட்டில் இருப்பவரை தேர்வு செய்கின்றனர். இதுபோன்ற பல காரணங் களால் நாம் தமிழர் கட்சியி லிருந்து விலகி, புதிய கட்சியை தொடங்கி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>ராமேசுவரத்தில் நடைபெற்ற மேதகு நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் பங்கேற்றோர்.</p></div>
தேன்கனிக்கோட்டை கிளை நூலகத்தில் தீண்டாமை கொடுமை - வாசகர்கள் குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in