நாடு முழுவதும் 552 நகரங்களில் நாளை ‘நீட்’ தேர்வு

2 லட்சம் இடங்களுக்கு 22.80 லட்சம் பேர் போட்டி
நாடு முழுவதும் 552 நகரங்களில் நாளை ‘நீட்’ தேர்வு
Updated on
2 min read

சென்னை: இளநிலை மருத்​து​வப் படிப்​பு​களுக்​கான நீட் தேர்வு நாடு முழு​வதும் 552 நகரங்​களில் நாளை நடை​பெறுகிறது. சுமார் 2 லட்​சம் மருத்​துவ இடங்​களுக்கு 22.80 லட்​சம் பேர் விண்​ணப்​பித்​துள்​ளனர்.

நாடு முழு​வதும் அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களின் எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​கள், சித்​தா, ஆயுர்​வே​தா, யுனானி, ஓமியோபதி படிப்​பு​கள், ராணுவக் கல்​லூரி​களில் பிஎஸ்சி நர்​சிங் படிப்​பு​கள் மற்​றும் கால்​நடை மருத்​து​வப் படிப்​பின் அகில இந்​திய ஒதுக்​கீட்டு இடங்​கள் ஆகியவை தேசிய தகுதி மற்​றும் நுழைவுத் தேர்​வில் (NEET - ‘நீட்’) தகுதி பெறு​பவர்​களைக் கொண்டு நிரப்​பப்​படு​கின்​றன.

இந்த தேர்வை தேசிய தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) ஆண்​டு​தோறும் நடத்​துகிறது. அதன்​படி, 2026-27-ம் கல்வி ஆண்​டுக்​கான நீட் தேர்வு நாடு முழு​வதும் மே 3-ம் தேதி (நாளை) பிற்​பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடை​பெற உள்​ளது.

தமிழகத்​தில் சென்​னை, செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர், திருச்​சி, மதுரை, கோவை என 30 நகரங்​கள் உட்பட நாடு முழு​வதும் 552 நகரங்​களில் தேர்வு நடை​பெறும். துபாய், அபு​தாபி, தோகா, மஸ்​கட், ரியாத், சிங்​கப்​பூர் என வெளி​நாடு​களில் 14 இடங்​களி​லும் தேர்வு நடை​பெறுகிறது.

சுமார் 2 லட்​சம் இடங்​கள் உள்ள நிலை​யில், 9.47 லட்​சம் மாணவர்​கள், 13.33 லட்​சம் மாணவி​கள் என மொத்​தம் 22.80 லட்​சம் பேர் தேர்​வுக்கு விண்​ணப்​பித்​துள்​ளனர். தமிழ், ஆங்​கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடை​பெறும்.

இந்​நிலை​யில், தேர்​வுக்​கான வழி​காட்டு நெறி​முறை​களை தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) வெளி​யிட்​டுள்​ளது. அதன் விவரம்: தேர்​வர்​கள் தண்​ணீர் பாட்​டில் எடுத்​துச் செல்​லலாம்.

அவை வெளிப்​படைத் தன்​மை​யுடன் அதாவது ஒளிபு​கும் வித​மாக இருக்க வேண்​டும். மத நம்​பிக்கை சார்ந்த அடை​யாளங்​கள், பொருட்​களை அணிந்து வரலாம். அதே​போல, சாதாரண ஆடைகளை அணிவதே சரி​யானது.

தேவைப்​பட்​டால் முழுக்கை ஆடைகள் அல்​லது கம்​பளி ஆடை அணிய அனு​ம​திக்​கப்​படு​வார்​கள். ஆனால், முறை​யான சோதனைக்கு ஒத்​துழைக்​கும் வித​மாக, குறிப்​பிட்ட நேரத்​துக்கு முன்​ன​தாகவே தேர்வு மையத்​துக்கு வந்​து​விட​வேண்​டும்.

உயரம் குறைந்த (லோ ஹீல்​ஸ்), சாதாரண காலணி​களை அணி​ய​லாம். உயர​மான காலணி​கள், கனமான அணி​கலன்​கள் அணிவதை தவிர்க்க வேண்​டும். தேர்​வர்​கள் காலை 11 முதல் மதி​யம் 1.30 மணி வரை தேர்வு மையத்​துக்​குள் செல்ல அனு​ம​திக்​கப்​படு​வார்​கள். 1.30 மணிக்​குப் பிறகு வந்​தால் அனு​மதி இல்​லை.

தேர்வு மையத்​துக்கு முன்​கூட்​டியே வந்​தடை​யும் வகை​யில் பயணத்தை திட்​ட​மிட வேண்​டும் என்​பது உட்பட பல்​வேறு வழி​காட்​டு​தல்​களை என்​டிஏ வெளி​யிட்​டுள்​ளது.

மனநல ஆலோ​சனை

இதற்​கிடையே, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில், ‘நீட் தேர்வு 3-ம் தேதி நடை​பெற உள்ள நிலை​யில், மாணவர்​களின் மன உறு​தி, மனநலம் காக்​கும் வகை​யில் தமிழக அரசின் ‘நட்​புடன் உங்​களோடு’ திட்​டம் மூலம் தொலைபேசி வழி​யாக மனநல ஆலோ​சனை​கள் வழங்​கப்​படு​கின்​றன.

டெலி கவுன்​சிலிங் தேவைப்​படும் மாணவர்​கள், பெற்​றோர் தயங்​காமல் ‘14416’ அல்​லது ‘104’ ஆகிய தொலைபேசி எண்​களில் தொடர்பு கொள்​ளலாம். பயிற்சி பெற்ற மனநல ஆலோ​சகர்​கள், மருத்​து​வர்​கள் மூலம் கட்​ட​ணமின்றி இச்​சேவை 24 மணி நேர​மும் வழங்​கப்​படு​கிறது’ என்று கூறப்​பட்​டுள்​ளது.

நாடு முழுவதும் 552 நகரங்களில் நாளை ‘நீட்’ தேர்வு
ஜோதிட நாள்காட்டி 02.05.2026 | சித்திரை 19 - சனிக்கிழமை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in