“திமுக கூட்டணிக்கு பில்டிங் ஸ்ட்ராங்... பேஸ்மென்ட் வீக்!” - சுந்தர்.சி விமர்சனம்

சுந்தர்.சி

சுந்தர்.சி

படம்: நா.தங்கரத்தினம்

Updated on
2 min read

மதுரை: “திமுக பலமான கட்சியல்ல, பலமாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வதே அக்கட்சியின் பலம். திமுக பலமாக இருந்தால் ஏன் 24 கட்சிகளோடு கூட்டணி அமைக்க வேண்டும்” என மதுரை மத்திய தொகுதி என்டிஏ கூட்டணி வேட்பாளர் சுந்தர்.சி கேள்வி எழுப்பினார்.

மதுரை எல்லீஸ் நகரில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மதுரை மத்திய தொகுதியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக மாநகர மாவட்டச் செயலாளர் செல்லூர் கே.ராஜு தலைமை வகித்தார். புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்தார். தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது என்டிஏ கூட்டணி வேட்பாளர் சுந்தர்.சி பேசும்போது, “எம்ஜிஆரின் பரம ரசிகன். எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டு பழனிசாமியால் பாதுகாக்கப்படும் அதிமுகவின் வேட்பாளராக போட்டியிடுகிறேன்.

எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து சினிமா திரையரங்கை எரிப்போம் என மிரட்டினர். அப்போது அதிமுகவினர் திரையரங்குக்கு பாதுகாப்பாக இருந்து திரையிட்டனர். அந்த திரைப்படத்தில் நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற வசனம் வரும்.

அதேபோல், மத்திய தொகுதியில் உள்ள மக்களை சந்திக்கும்போது வெற்றி உறுதி என்ற நம்பிக்கை தெரிகிறது. நமது வெற்றியை 4-ம் தேதி சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும் எனச் சொல்லலாம்.

தேர்தல் நடைபெறும் ஏப்.23-ம் தேதியில் 2 இரட்டை இலையை குறிக்கும். 3 என்ற எண் எம்ஜிஆர், அம்மா, இபிஎஸ், ஏசிஎஸ், வெற்றி ஆகியவை மூன்றெழுத்து, வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட விஷயம். மத்திய தொகுதியில் ஜெயிக்கவே முடியாது என்பதற்கு அவர் என்ன எம்ஜிஆரா, பிடிஆர் தானே. நாமெல்லாம் சேர்ந்து ஒரு கை பார்ப்போம்.

திமுக ஒன்றும் வலிமையான கட்சியல்ல, திமுகவின் பலமே தாங்கள் பலமாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வதுதான். அப்படி திமுக பலமாக இருந்தால் ஏன் 24 கட்சிகளோடு கூட்டணி அமைக்க வேண்டும். கூட்டமாக இருப்பதால் அது கூட்டணி கிடையாது. இங்கு கூடியிருப்பதுதான் கூட்டணி, நம் கூட்டணி கொள்கையால் சேர்ந்த கூட்டணி. திமுக கூட்டணியில் ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளன. என் பாஷையில் சொன்னால் பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மென்ட் வீக் என்பதுபோல்தான் திமுக கூட்டணி.

தமிழக முதல்வர் மத்திய அரசோடு தேவையில்லாமல் சண்டைபோட்டு தமிழகத்துக்கு வர வேண்டிய நிதியை தடுத்துள்ளனர். இப்போது தங்க நகரமாக இருக்க வேண்டிய மதுரையை குப்பை நகரமாக மாற்றியுள்ளனர். எங்கு பார்த்தாலும் ஊழல் லஞ்சம் மலிந்து கிடக்கிறது. மதுரை மாநகராட்சியில் ரூ.200 ஊழல் கோடி நடந்துள்ளது. திமுக ரூ.200 கோடி எல்லாம் ஊழல் செய்ய மாட்டார்கள், அதற்கு மேல் பல்லாயிரம் கோடி ஊழல் செய்திருப்பார்கள். ஆகையால் வெளியில் தெரிந்தது ரூ.200 கோடி.

தோல்வி பயத்தில் என் மீது தவறான வதந்தியை திமுகவினர் பரப்புகின்றனர். வாரத்தில் வியாழன் தவிர மற்ற நாட்களில் கறி சாப்பிடுவேன், பொய் பிரச்சாரம், வதந்தி பரப்புகிறவர்களுக்கும் கறி விருந்துபோடுவோம். மக்கள்தான் நமது எஜமானர்கள் என நினைக்கிறோம். ஆனால் சிலர் மக்களுக்கு தான் தான் எஜமானர் என நினைப்போருக்கு இந்த தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்.

இந்த தேர்தல் மதுரை மக்களுக்கு மாறுதல், வாடிய இதயங்களுக்கு ஆறுதல், இந்த திமுக கூட்டணிக்கு ஓடுதல். எனவே வரும் தேர்தலில் தோளோடு தோள் நின்று உழைத்து வெற்றிக்கனியை பறித்து பழனிசாமியை முதல்வர் நாற்காலியில் அமர வைப்பதற்கு என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்” என்று அவர் பேசினார்.

<div class="paragraphs"><p>சுந்தர்.சி</p></div>
“அப்பட்டமான பிளாக்மெயில் இது!” - மகாராஷ்டிர முதல்வருக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in