​சொத்தை எழுதிக் கொடுக்கத் தயாரா? -  உள்துறை அமைச்சரை ஒரண்டை இழுக்கும் நாராயணசாமி

​சொத்தை எழுதிக் கொடுக்கத் தயாரா? - உள்துறை அமைச்சரை ஒரண்டை இழுக்கும் நாராயணசாமி

Published on

​காங்​கிரஸ் கட்​சி​யின் மூத்த தலை​வ​ரும் புதுச்​சேரி​யின் முன்​னாள் முதல்​வ​ரு​மான நாராயண​சாமி, அவ்​வப்​போது ஆளும் அரசுக்கு எதி​ராக ஊழல் குற்​றச்​சாட்​டு​களை அடுக்​கு​வார். அதன்​படி, முதல்​வர் உள்​ளிட்ட அமைச்​சர்​கள் மீது அவர் அள்​ளிப் போட்ட ஊழல் குற்​றச்​சாட்​டு​களுக்கு பதிலடி கொடுக்​கும் வித​மாக நாராயணசாமி மீதே ஊழல் துப்​பாக்​கியை திருப்பி இருக்​கிறது எதிர் தரப்​பு.

தேர்​தல் நெருங்​கும் சமயத்​தில் இந்த பரஸ்பர ஊழல் குற்​றச் சாட்​டு​கள் புதுச்​சேரி அரசி​யலை கலகலப்​பாக்கி வரு​கிறது. குறிப்​பாக, காங்​கிரஸில் இருந்து பாஜக-வுக்கு ஜாகை மாறி தற்​போது உள்​துறைக்கு அமைச்​ச​ராக இருக்​கும் நமச்​சி​வா​யம் சொத்​துகளை வாங்கி குவித்து இருப்​ப​தாக நாராயண​சாமி அடிக்​கடி அள்​ளித் தூற்​று​வார்

அப்​படி அவர் அண்​மை​யில் அள்​ளிப் போட்ட ஊழல் குற்​றச்​சாட்​டு​களுக்கு பதிலடி கொடுத்த நமச்சிவாயம், “அனைத்து சொத்​துகளை​யும் நான் நேர்​மை​யான முறை​யில் வாங்கி இருக்​கிறேன். இதற்​கான வரு​மான வரிக் கணக்​கை​யும் தாக்​கல் செய்​துள்​ளேன். ஆனால் நாராயண​சாமி, பாகூர் கிரா​மத்​தில் நூற்​றுக்​கணக்​கான ஏக்​கர் நிலத்தை பினாமி பெயரில் வாங்கி வைத்​திருக்​கி​றார். பல மாநிலங்​களில் அவருக்கு சொத்​துகள் இருக்​கின்​றன" என்று பொது​வெளி​யில் போட்டு உடைத்​தார்.

இதற்கு பதில் சொன்ன நாராயண​சாமி, “நான் ஊழல் செய்​ய​வில்​லை. எனது சொத்​துகளை விற்​றுத்​தான் தற்​போது செலவு செய்து வரு​கிறேன். என்​னிடம் அப்​படி எந்த பெரிய சொத்​தும் கிடை​யாது. நமச்​சி​வா​யத்​திடம் இருக்​கும் அனைத்து சொத்துகளை​யும் எனது பெயருக்கு மாற்​றித் தர தயா​ராக இருந்​தால், என்​னிடம் உள்ள அனைத்து சொத்​துகளை​யும் நமச்​சி​வா​யத்​துக்கு தரத் தயா​ராய் இருக்​கிறேன். இதற்கு அவர் தயா​ரா?" என்று சவால் விடுத்​துள்​ளார்.

இதனிடையே புதுச்​சேரி அரசி​யலுக்​குள் புதிய வரவாக வந்​திருக்​கும் லாட்​டரி அதிபர் மார்ட்​டினின் மகன் ஜோஸ் சார்​லஸும், "நா​ராயண​சாமி பல மாநிலங்​களில் ஏகப்​பட்ட சொத்​துகளை வாங்​கிக் குவித்​துள்​ளார். நேரம் வரும்​போது அதை எல்​லாம் வெளி​யிடு​வேன்" என்று தன் பங்குக்கு புழு​தி​யைக் கிளப்பி இருக்​கி​றார். அசரா​மல் இதற்​கும் பதில் கொடுத்த நாராயண​சாமி, "நான், பல மாநிலங்​களில் சொத்து வாங்​கி​யிருப்​ப​தாக ஜோஸ் சார்​லஸ் கூறுகி​றார். ஸ்டாம்ப் பேப்​பரில் கையெழுத்​துப் போட்​டுத் தரு​கிறேன். எந்த மாநிலத்​துக்கு வரச் சொன்​னாலும் வந்து கையெழுத்​துப் போடு​கிறேன்.

என் பெயரில் அப்​படிச் சொத்து ஏதே​னும் இருந்​தால் அவர் எடுத்​துக் கொள்​ளலாம். அதேசம​யம், ஜோஸ் சார்​லஸும் அவரது சொத்​துகளை எனக்கு எழு​திக் கொடுக்க வேண்​டும். அவரது சொத்து விவரங்​களும் அவர் மீதான வழக்கு விவரங்​களும் என்​னிடம் இருக்​கின்​றன. இதற்கு அவர் தயா​ரா?” என்​றார்.

நெருப்​பில்​லாமல் புகை​யு​மா... உங்​கள் மீது தொடர்ச்​சி​யாக ஊழல் குற்​றச்​சாட்​டு​கள் வரு​கிறதே... சும்​மா​வா? என்று நாராயண​சாமியைக் கேட்​டால், "அட ஏங்​க... இவர்​கள் சொல்​வது போல் நான் அப்​படி எல்​லாம் ஊழல் செய்​து, சொத்து சேர்த்​திருந்​தால் இந்​நேரம் மோடி என்னை விட்​டு​வைத்​திருப்​பா​ரா?" என லாஜிக்​காக கேட்​டுத் தாக்​கு​கி​றார். தேர்​தல் சமயத்​தில் இப்​படி வந்து விழும் ஊழல் வாக்​குமூலங்​களை எல்​லாம் புதுச்​சேரி மக்​கள் அலுப்​புத் தட்​டா​மல் கேட்டு ரசித்​துக் கொண்​டிருக்​கிறார்​கள்​.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in