“தமிழகம் காவிமயமாக துணை நின்றவர் கருணாநிதி” - ஃப்ளாஷ் பேக் பேசும் நாராயணன் திருப்பதி

“தமிழகம் காவிமயமாக துணை நின்றவர் கருணாநிதி” - ஃப்ளாஷ் பேக் பேசும் நாராயணன் திருப்பதி
Updated on
1 min read

​கா​விமய​மாக தமி​ழ​கம் வர கருணாநிதி விரும்​பி​னார் என பாஜக மாநில தலை​மைச் செய்தி தொடர்​பாளர் நாராயணன் திருப்​பதி தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக சென்​னை​யில் உள்ள தமிழக பாஜக தலைமை தேர்​தல் அலு​வல​கத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் பேசிய நாராயணன் திருப்​பதி கூறிய​தாவது: தேர்​தல் நெருங்க நெருங்க முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், தான் என்ன பேசுகி​றோம், என்ன செய்​கி​றோம், என்​பதை மறந்து தேவை​யில்​லாத விஷ​யங்​களை பேசிக்​கொண்​டிருக்​கி​றார். ஒரு முதல்​வ​ராக எப்​படிப் பேச வேண்​டும், என்ன பேச வேண்​டும் என்​பதே அவருக்கு தெரிய​வில்​லை.

திருச்​சி​யில் முதல்​வர் பேசும் போது, தமி​ழ​கத்தை எப்​படி​யா​வது காவிமய​மாக்கி விட வேண்​டும் என பாஜக துடிக்​கிறது என்​றும், கருப்​பு, சிவப்பு கூட்​டம் இருக்​கும் வரை யார் அப்​பன் வந்​தா​லும் அது நடக்​காது என்​றும் பேசி​யுள்​ளார். ஒரு முதல்​வர் பொது​வெளி​யில் பேசும்​போது இப்​படிப் பேசலா​மா. இதன் மூலம் முதல்​வரின் ‘லெவல்’ அவ்​வளவு தான் என்​பதை நம்​மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் 1999-லேயே அவரது தந்தை கருணாநிதி தான், காவிமய​மாக தமி​ழ​கம் வர வேண்​டும் என்று விரும்​பி​னார். அதற்​குத் துணை​யும் நின்​றார். கருப்பு சிவப்பு இருக்​கும் வரை காவி உறு​தி​யாக இருக்​கும். அதே​போல், ஒரே நாடு ஒரே தேர்​தல் என்​பது ஒரு நோய். அந்த நோயை பாஜக பரப்​பு​கிறது என முதல்​வர் சொல்​லி​யிருக்​கி​றார். அப்​படி​யா​னால், முதல்​வர் ஸ்டா​லினின் தந்தை இந்த நோயை பரப்​பி​னா​ரா... நோய் பரப்​புவ​தில் வல்​லுந​ராக இருந்​தாரா கருணாநி​தி?

ஒரே நாடு ஒரே தேர்​தல் குறித்து சட்​டப்​பேர​வை​யில் கருணாநிதி தெளி​வாகப் பேசி​யிருக்​கி​றார். அப்​படி​யென்​றால், கருணாநி​தியை மீறி முதல்​வர் ஸ்டா​லின் செயல்​படு​கி​றா​ரா? அப்​படி செயல்​படு​வதற்கு இப்​போது என்ன தேவை என்​பது புரிய​வில்​லை. திமுக - காங்​கிரஸ் ஆட்சி காலத்​தில் கொடுத்த வரிப் பகிர்வை விட, நிதிப் பகிர்வை விட 4 முதல் 5 மடங்கு அதி​க​மாக தான் பாஜக அரசு வழங்​கி​யுள்​ளது.

கடந்த 10 ஆண்​டு​களில் மட்​டும் கிட்​டத்​தட்ட ரூ.7.02 லட்​சம் கோடி ரூபாய் தமி​ழ​கத்​துக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது. ரூ.14 லட்​சம் கோடிக்​கும் அதி​க​மாக நிதி வழங்​கப்​பட்​டுள்​ளது. திமுக ஆட்​சி​யில் மக்​கள் கொதித்​துப் போய் உள்​ளனர். நாளொரு கொலை​யும் பொழுதொரு பாலியல் வன்​முறைச் சம்​பவங்​களும் தமி​ழ​கத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

“தமிழகம் காவிமயமாக துணை நின்றவர் கருணாநிதி” - ஃப்ளாஷ் பேக் பேசும் நாராயணன் திருப்பதி
“விஜய் கட்சியுடன் பேச்சுவார்த்தையா? டீயும் காபியும் ஒன்றாக கலக்காது” - அண்ணாமலை பதில்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in