முதலீடு ஈர்த்துள்ளதாக அரசு கூறுவது பொய்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்

நயினார் நாகேந்திரன் 

நயினார் நாகேந்திரன் 

Updated on
1 min read

சென்னை: லண்​டனில் ரூ.15,300 கோடிக்கு புதிய தொழில் முதலீடு​களை ஈர்த்​துள்​ள​தாக அரசு தரப்​பில் கூறு​வது முற்​றி​லும் பொய் என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​தார்.

இதுகுறித்து சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: முதல்​வர் லண்​டன் பயணம் மேற்​கொண்​டதற்​கான காரணம் குறித்து இது​வரை எந்​தவொரு தெளி​வான விளக்​க​மும் அளிக்​கப்​பட​வில்​லை. தொழில் முதலீடு​களை ஈர்ப்​ப​தற்​காகவே அவர் சென்​றுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. பொது​வாகத் தொழில் முதலீடு​கள் இரு வகைப்​படும்.

ஒன்று ‘கிரீன்ஃபீல்ட்’. அதாவது முற்​றி​லும் புதி​தாகத் தொடங்​கப்​படும் தொழில்​கள்; மற்​றொன்று ‘பிர​வுன்ஃபீல்ட்’. அதாவது ஏற்​கெனவே இயங்​கிக் கொண்​டிருக்​கும் தொழில்​கள். முதல்​வர் புதி​தாகத் தொழில்​களைத் தொடங்​கு​வதைவிட, ஏற்​கெனவே பயன்​பாட்​டில் இருக்​கும் ‘பிர​வுன்ஃபீல்ட்’ திட்​டங்​களுக்​காகவே இந்​தச் சுற்​றுப்​பயணத்தை மேற்​கொண்​டுள்​ளார் என கருதுகிறேன்.

லண்​டனில் ரூ.15,300 கோடிக்கு முதலீடு​களை ஈர்த்​துள்​ள​தாக அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டிருப்​பது முற்​றி​லும் பொய். அவை அனைத்​தும் ஏற்​கெனவே இருக்​கக்​கூடிய தொழில் திட்​டங்​கள் தான். இதில் புதி​ய முதலீடு இல்​லை. முதல்​வர் விஜய், பட்​டினப்​பாக்​கத்​துக்கு பதில் வேறு இடத்தை தலைமைச் செயல​கம் கட்ட தேர்வு செய்ய வேண்​டும். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

<div class="paragraphs"><p>நயினார் நாகேந்திரன்&nbsp;</p></div>
நலம் விசாரித்தவர்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in