“புதிய தலைமைச் செயலகம் விவகாரத்தில் மர்மம் என்ன?” - நயினார் நாகேந்திரன் கேள்வி

நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

Updated on: 
1 min read

சென்னை: “எப்படி அரசால் கட்டப்படும் புதிய தலைமைச் செயலகம் குறித்த எந்தவித தகவலும் சம்பந்தப்பட்ட அரசிடமே இல்லாமல் போகும்? எதை மூடி மறைக்கிறார்கள்?” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் மறைந்துள்ள மர்மம் என்ன? பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கலாம் என்று எதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என்ற ஆர்டிஐ கேள்விக்கு, ‘அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை’ என அரசு பதிலளித்திருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது.

சுமார் 5,000-க்கும் அதிகமான மீனவர்களைக் கொண்ட, 1500-க்கும் அதிகமான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பட்டினப்பாக்கத்தில், முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் தலைமைச் செயலகம் கட்ட யார் பரிந்துரைத்தது?

முதல்வரின் இல்லத்துக்கு மிக அருகில் இருக்கும் ஒரே காரணத்துக்காக கண்ணை மூடிக் கொண்டு பட்டினப்பாக்கத்தை தேர்வு செய்து விட்டார்களா? அல்லது அங்கு வாழும் மீனவக் குடும்பங்களை குறைத்து மதிப்பிட்டு விட்டார்களா?

அது எப்படி அரசால் கட்டப்படும் புதிய தலைமைச் செயலகம் குறித்த எந்தவித தகவலும் சம்பந்தப்பட்ட அரசிடமே இல்லாமல் போகும்? எதை மூடி மறைக்கிறார்கள்?

இப்படி எல்லாவற்றையும் ‘எடுத்தோம், கவிழ்த்தோம்’ என்று முடிவு செய்வதால்தான் அடிக்கடி ‘யு-டர்ன்’ போட்டுக் கொண்டிருக்கிறது தவெக அரசு” என்று அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>நயினார் நாகேந்திரன் </p></div>
“கருத்து கூறியதற்காக வழக்கு பதிவு செய்வது தவறு” - ப.சிதம்பரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in