நயினார் நாகேந்திரன் திடீர் டெல்லி பயணம்

நயினார் நாகேந்திரன் திடீர் டெல்லி பயணம்
Updated on
1 min read

சென்னை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்மைக் காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

சமீபத்தில் முதல்வர் விஜய் மற்றும் அவரது பெற்றோர் குறித்து அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. சொந்த கட்சியினரே கண்டித்தனர்.

இந்தச் சூழலில், நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படலாம் என்ற பேச்சு பாஜக வட்டாரத்தில் வலுத்து வருகிறது.

இந்நிலையில், பாஜகவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ள சூழலில், நயினார் நாகேந்திரன் நேற்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களைச் சந்தித்து, தமிழக பாஜகவில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய நியமனங்கள், மாநிலத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் மத்திய அமைச்சரவை மாற்றங்கள் குறித்து ஆலோசிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

நயினார் நாகேந்திரன் திடீர் டெல்லி பயணம்
அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டவற்றை ரீல்ஸாக வெளியிட்டால் நடவடிக்கை: பேரவைத் தலைவர் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in