‘தவெக வேட்பாளர்கள் குதிரை பேர ஊழலுக்கு காரணமானவர்கள்’ - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் கணிதா சம்பத்துக்கு ஆதரவாக, பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் கணிதா சம்பத்துக்கு ஆதரவாக, பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Updated on: 
1 min read

மதுராந்தகம்: தவெக வேட்​பாளர்​கள் குதிரை பேர ஊழலுக்கு காரண​மானவர்​கள் என பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் விமர்​சித்​துள்​ளார்.

மது​ராந்​தகத்​தில் அதி​முக வேட்​பாளர் கணிதா சம்​பத்​துக்கு ஆதர​வாக, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் நேற்று பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: மது​ராந்​தகம் சட்​டப்​பேரவை தொகு​தி​யில் அதி​முக பெயரைக்​கூறி வெற்றி பெற்​றவர்​கள் என்ன செய்​தார்​கள் என்​பது உங்​களுக்கு தெரி​யும். 10 நாட்​களில் ராஜி​னாமா செய்த அவர்​கள் மீண்​டும் தேர்​தலில் வேறு கட்​சியி​லிருந்து போட்​டி​யிடு​கிறார்​கள்.

அவர்கள் குதிரை பேரம் ஊழலுக்கு காரண​மாகி​யுள்​ளார்​கள். நான்கு மாத ஆட்​சி​யில் என்ன நடந்​தது என்​பது சிந்​தித்து பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்​டும். அதனால், அதி​முக வேட்​பாளர்களையே ஆதரிக்க வேண்​டும்.

மேலும் தவெக தலைவர் விஜய்யை இந்தியாவின் வருங்​கால பிரதமர் என பேசி வரு​கின்​றனர். ஆனால், பிரதமர் பதவி என்​பது அவ்வளவு சாதா​ரண​மானது அல்ல. இந்த இடைத்​தேர்​தலில் வெற்றி பெற்​றால் அதி​முக பெரிய வாய்ப்பை பதிவு செய்​யும். நயினார் நாகேந்திரனை தொட்டுப் பாருங்கள் பின்னர் என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியும். பட்​டினப்​பாக்​கத்​தில் தலைமைச்செயல​கம் என்​பது திட்​ட​மி​டாத செயல். அதி​முக வேட்​பாளரை ஆதரி​யுங்​கள், தமிழகத்​தில் மாற்​றத்தை ஏற்​படுத்​துங்​கள். இவ்​வாறு அவர் பேசி​னார்​.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in